இந்தியாவை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் தனது வினோதமான செயலுக்காக 9 வாரம் சிறைத் தண்டனையை பெற்றுள்ளார். தவறுதலாக தனது வங்கிக் கணக்கில் வந்த விழுந்த பணத்தை தனது கடனை தீர்க்க பயன்படுத்தி இருக்கிறார். அதில் சிறிதளவு பணத்தை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கும் அனுப்பி இருக்கிறார். இவருடைய இந்த செயலுக்காக 47 வயதான இவருக்கு 9 வாரம் சிறைத் தண்டனை விடுத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.
பெரியசாமி மதியழகன் என்ற நபர் 2021-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை பிளம்பிங் மற்றும் இன்ஜினியரிங் வேலையை ஒரு நிறுவனத்தில் செய்துள்ளார். நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர், தவறாக தனது தனிப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கில், சிங்கப்பூர் டாலர் 25,000 SGD-ஐ பெரியசாமி மதியழகனின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.16 லட்சம். தவறாக பணத்தை அனுப்பிய அதே நாளில் அந்த நிர்வாகி நிறுவனத்தின் இயக்குனரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

அதன் பிறகு அந்தப் பெண் நிர்வாகி தான் தவறாக பணத்தை பெரியசாமி மதியழகனின் அக்கவுண்டுக்கு அனுப்பி விட்ட விஷயத்தை வங்கிக்கு தெரிவித்துள்ளார். மேலும் பணத்தை தனக்கு மீட்டெடுத்து தரவும் கூறியுள்ளார். அதன் பிறகு வங்கி ஏப்ரல் 10-ஆம் தேதி, 2023 அன்று அந்த நபரின் முகவரிக்கு பண பரிமாற்றம் பற்றி விளக்கம் தரக் கூறியும், பணத்தை திருப்பித் தருமாறும் ஒரு கடிதம் அனுப்பியது.
சுவாரசியமாக அந்தக் கடிதம் அவருடைய முகவரிக்கு செல்லவில்லை. ஏனெனில் பெரியசாமி மதியழகன் தன் வங்கியில் கடைசியாக பதிவு செய்யப்பட்ட தனது நிறுவனத்தின் முகவரியை கொடுத்துள்ளார். எனவே அந்த கடிதம் நிறுவனத்திற்கே மீண்டும் வந்தது. இதன் காரணமாக பணத்தை திரும்ப பெறுவதற்கான அவருடைய கோரிக்கை தோல்வியடைந்ததாக வங்கி அந்த நிறுவனத்தின் நிர்வாகியிடம் தெரிவித்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் நிர்வாகி மே 23-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் அந்த நபர் தனது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மே 23-ஆம் தேதி அன்றே கண்டுபிடித்தது தெரியவந்தது.
தன் வங்கி கணக்கிற்கு வந்தத் தொகை தனக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தும் அவர் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மே 11 மற்றும் மே 12 ஆகிய தேதிகளில் நான்கு வெவ்வேறு பரிவர்த்தனைகளின் மூலம் முழு பணத்தையும் மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
அந்த மாதத்தின் பிற்பகுதியில் அந்தப் பெண் நிர்வாகி பெரியசாமி மதியழகனை வரவழைத்து பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் தனது கடனை அடைக்க முழு தொகையையும் பயன்படுத்தியதாக பதில் அளித்தார்.
போலீஸ் விசாரணையின் போது, அவர் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியதாகவும், மாதந்தோறும் SGD 1,500 செலுத்தி கடனைத் திருப்பிச் செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த பணம் இன்று வரை மீட்கப்படவில்லை என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications