மோசமான நிலையில் டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பா..?!

மும்பை பங்குச்சந்தையில் இன்று ஒரு நாளில் மட்டும் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டு உள்ளது, இந்த சரிவில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல முதலீட்டாளர்கள் இதை வாய்ப்பாகக் கருதினாலும், எப்போது முதலீடு செய்யத் துவங்குவது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இதேபோல் இந்தியப் பங்குச்சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் பங்கு விலை அதிகப்படியாக இருக்கிறது என பல முறை பல முதலீட்டு வல்லுநர்கள் கூறியுள்ளனர். இப்படியிருக்கையில் புதிதாக முதலீடு செய்வோருக்கும், கூடுதலாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வோருக்கும் இந்த மார்கெட் கரெக்ஷன் ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

மோசமான நிலையில் டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பா..?!

ஆயினும், பல முதலீட்டாளர்களின் போர்ட்போலியோ தற்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இதைச் சரி செய்யப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் புதிய உக்தியை கையாள வேண்டும்.

நிதியியல் அடிப்படையில் வலிமையாக இருக்கும் பங்குகள், உள்நாட்டில் அதிகம் டிமாண்ட் இருக்கும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள், தொடர்ந்து முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள அதிக டவிடென்ட் கொடுக்கும் நிறுவனப் பங்குகள் எனப் பல காரணிகளை ஆய்வு செய்து முதலீடு செய்வது மூலம் இதுபோன்ற மோசமான வர்த்தக சூழ்நிலையில் இருந்து வேகமாக மீண்டு வர முடியும்.

உதாரணமாக கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் பாதிப்பின் போது பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும், இதன் பின்பு வேகமாக உயர்ந்த நிறுவனங்களைக் கணக்கிட்டாலே எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது முதலீட்டாளர்கள் தீர்மானித்துக்கொள்ள முடியும்.

இந்திய பங்குச் சந்தையில் சரிவு என்பது டிரம்ப் விதித்த வரியால் மட்டும் இல்லை, 2025 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது.

குறிப்பாக, பம்பாய் பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ஆண்டின் தொடக்கத்தில் 442 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 403 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது சுமார் 40 லட்சம் கோடி ரூபாய் சந்தை திருத்தத்தை காட்டுகிறது. பிஎஸ்இ 500 பங்குகளை ஆய்வு செய்ததில், 10 முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதன குறைப்புகளை சந்தித்துள்ளன. அப்படி யார் அதிகப்படியான சந்தை மூலதனத்தை இழந்துள்ளனர் என்பதை இப்போது பார்ப்போம்.

டாடா குழுமத்தின் தங்க முட்டையிடும் வாத்தாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் சந்தை மூலதனம் 14.82 லட்சம் கோடியிலிருந்து 11.94 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 7.81 லட்சம் கோடியிலிருந்து 6.03 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5.21 லட்சம் கோடியிலிருந்து 3.86 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

மோசமான நிலையில் டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பா..?!

ஐடிசி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 6.05 லட்சம் கோடியிலிருந்து 5.13 லட்சம் கோடியாகவும், எடர்னல் (Zomato) நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.68 லட்சம் கோடியிலிருந்து 2.03 லட்சம் கோடியாகவும் குறைந்துள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) சந்தை மூலதனம் 5.64 லட்சம் கோடியிலிருந்து 5.01 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

மேலும், விப்ரோ நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3.16 லட்சம் கோடியிலிருந்து 2.58 லட்சம் கோடியாகவும், சீமென்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.33 லட்சம் கோடியிலிருந்து 1.76 லட்சம் கோடியாகவும் குறைந்துள்ளது. டிரெண்ட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.53 லட்சம் கோடியிலிருந்து 1.98 லட்சம் கோடியாகவும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3.74 லட்சம் கோடியிலிருந்து 3.23 லட்சம் கோடியாகவும் குறைந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் 2025 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையின் பல்வேறு துறைகளில் பரவலான சந்தை மூலதன குறைவை காட்டுகின்றன. இது எதிர்மறையான முதலீட்டாளர் உணர்வு மற்றும் சந்தை திருத்தத்தின் காலத்தை குறிக்கிறது, இது பல முக்கிய இந்திய நிறுவனங்களை பாதிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+