ஐபிஓ வெளியிட்டு பில்லினியர்களான இந்தியர்கள்.. 2025ஆம் ஆண்டில் ஐபிஓ சந்தை எப்படி இருக்கும்?

மும்பை: 2024 ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஐபிஓ வெளியீடு செய்தன. அந்த வகையில் ஐபிஓ வெளியீட்டு மூலம் 7 தொழில்முனைவோர்கள் பில்லியனர்களான மாறியுள்ளனர். குறிப்பாக சோலார் செல்கள் உள்ளிட்ட புதுப்பிக்க தக்க எரிசக்தி துறையில் இயங்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஐபிஓ வெளியீட்டின் மூலம் கணிசமான லாபம் கண்டுள்ளனர். Waree energies நிறுவனத்தின் உரிமையாளர் ஹிடேஷ் டோசி, premier energies நிறுவனத்தின் சிரஞ்சீவ் சலுஜா, ஓலா நிறுவனத்தின் பவிஷ் அகர்வால், Emcure pharma நிறுவனத்தின் சதீஷ் மேத்தா, acme solar நிறுவனத்தின் மனோஜ் குமார் உபாத்யாய், jyoti cnc automaton நிறுவனத்தின் பராகிரமசின் ஜடேஜா, allied blenders நிறுவனத்தின் கிஷோர் சபாரியா ஆகிய 7 பேரும் தொழில்முனைவோர்களாக இருந்து ஐபிஓ வெளியீட்டின் மூலம் பங்கு மதிப்பு உயர்ந்து பில்லினியர்களாக் உயர்ந்துள்ளனர்.

இவற்றில் கிட்டதட்ட மூன்று நிறுவனங்கள் சோலார் செல்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவை ஆகும். இந்தியாவில் இந்த துறைக்காக எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையே இது காட்டுகிறது. இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஐபிஓ வெளியீட்டின் மூலம் 1.66 டிரில்லியன் ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் 650 பில்லியன் ரூபாயாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் 85 நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியீடு செய்ய இருக்கின்றன. இதன் மூலம் சுமார் 1.53 ட்ரில்லியன் ரூபாய் திரட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஐபிஓ வெளியிட்டு பில்லினியர்களான இந்தியர்கள்.. 2025ஆம் ஆண்டில் ஐபிஓ சந்தை எப்படி இருக்கும்?


2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிக எண்ணிக்கையிலான ஐபிஓ வெளியீடு இருக்கும் மற்றும் அவை பிரீமியம் தொகையில் பட்டியலிடப்படுவதை காணலாம் என கூறும் நிபுணர்கள் இரண்டாம் பாதியில் இது சற்றே மந்தமடையும் என கூறுகின்றனர். குறிப்பாக ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் சந்தையில் ஐபிஓ வெளியீடு செய்வது கடினமானதாக இருக்கும் என கூறுகின்றனர்.

இந்திய ஐபிஓ சந்தை இதற்கு முன்பு பெருமளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம்பி இருந்த நிலையில் தற்போது அது மாறி இருக்கிறது . ஏனெனில் உள்நாட்டு நிறுவனங்களும் , சில்லறை முதலீட்டாளர்களும் தற்போது அதிக அளவில் ஐபிஓக்களில் முதலீடு செய்து வருகின்றனர்.எனவே 2025ஆம் ஆண்டில் அதே தொடரும் என்றும் ஐபிஓ முதலீடுகள் லாபமானவையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் பல பெரிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட தயாராக இருக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+