ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல் உள்ளது. சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது.
இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார்.
இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் இதை இந்திய பொருளாதாரம் குறித்த அச்சமாகவும் பார்க்கப்படுகிறது.
உள்ளாடை நிறுவனங்கள்
நிஃப்டி 50-யில் கடந்த ஒரு வருடத்தில் உள்ளாடை நிறுவனங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ரூபா அண்ட் கோ 51 சதவீதம் சரிவு, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50 சதவீதம் சரிவு, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது தத்தம் நிறுவனங்களின் உள்ளாடை விற்பனையிலும் எதிர்ரொலிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத்தில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.
ஆலன் கிரீன்ஸ்பான்
அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஏன் உள்ளாடை விற்பனை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவுகோலாக உள்ளது எனக் கூறுகிறார் என்றால் இது அனைத்து ஆண்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று, அதேபோல் இதை விலைக்கு ஏற்றார் போல் சரிய சைஸ் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது, எனவே இது கட்டாயம் மக்கள் வாங்கும் விஷயமாக உள்ளது என நம்புகிறார்.
உள்ளாடை விற்பனை
ஆண்கள் உள்ளாடை விற்பனை குறைகிறது என்றால் பொருளாதாரம் ரெசிஷன் அல்லது சரிவை நோக்கி செல்கிறது என்று பொருள். இந்த நிலையில் இந்தியாவில் உள்ளாடை விற்பனை அல்லது பயன்பாடு 55 சதவீதமாகச் சரிந்துள்ளது, இது பெரும் தலைவலியாக மாறியள்ளது.
பெரும் மாற்றம்
அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் அன்றைய வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பணம் ஈட்டும் சமுகத்தை வைத்து இது கணக்கிட்டு உள்ளார். ஆனால் இன்று வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புச் சமூகத்தில் பெரிய மாற்றம் எற்பட்டு உள்ளது.
பெண்களின் பங்கீடு
இன்றைய வேலைவாய்ப்பு சந்தையிலும், பணம் ஈட்டும் சமூகத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பெண்களின் பங்கீடு மிகவும் அதிகமாக இல்லை. இதனால் ஆலன் கிரீன்ஸ்பான் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்து ஆண்கள் உள்ளாடை விற்பனை மட்டும் கணக்கெடுக்காமல் பெண்கள் உள்ளாடை விற்பணையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பொருளாதார வளர்ச்சி அளவுகோளில் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications