சென்னை: உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு நாடு இந்தியா. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் மிடில் கிளாஸ் மக்களாக தான் இருக்கின்றனர் . ஆனால் இந்த மிடில் கிளாஸ் மக்களுக்கு தான் மிகப்பெரிய ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என நிதித்துறை நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சேமிப்பு குறைவு, கடன் அதிகம்: மார்கெல்லஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான சவுரப் முகர்ஜி மின்ட் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய மிடில் கிளாஸ் மக்கள் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளப் போகின்றனர் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைந்து இருக்கிறது, கடன் அதிகரித்து இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஆபத்து: இது தவிர இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்கள் ஐடி துறை சார்ந்த பெரிய அளவிலான பணி நீக்கத்தை எதிர்கொள்ள இருக்கின்றன என கூறும் அவர் இது மோசமான ஒரு சூழலை உண்டாக்கும் என எச்சரித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து மில்லியன் பட்டதாரிகள் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர் ஆனால் அவர்களுக்கு ஏற்ற அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வில்லை என கூறி இருக்கும் அவர், இந்தியா மிகப்பெரிய அளவிலான ஒரு வேலை இழப்பை எதிர்கொள்ள போகிறது என கூறியிருக்கிறார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா?: மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகையையும் இந்தியாவின் மக்கள் தொகையும் ஒப்பிட்டு இந்தியாவில் வைட் காலர் அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். உலகிலேயே 28 வயது என்ற சராசரி வயதில் இருக்கக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கக்கூடிய நாடு இந்தியா ஆனால் இங்கே அதற்கேற்ற வகையில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை அதற்கு மாறாக குறைந்து வருகிறது என கூறுகிறார்.
மக்கள் தயாராக இல்லை: மக்களும் இவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் அளவிற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மற்றொரு பிரச்சினை என்கிறார். பல்வேறு துறைகளிலும் ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் வருகையால் பணிநீக்கம் அதிகமாக இருக்கப் போகிறது ஆனால் இப்போது இருக்கக்கூடிய மக்கள் குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
சேமிப்பை விட செலவு அதிகம்: இந்தியாவை சேர்ந்த 30 மற்றும் 40களில் இருக்கக்கூடிய பலரும் தங்களுடைய பணத்தை சேமிக்காமல் மின்னணு சாதனங்கள் ,கார்கள் ,ஆடம்பரமான விடுமுறை கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்கின்றனர் என அவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் இதற்கு முன்பெல்லாம் ஒரு நபர் பள்ளி படிப்பை முடிப்பார் ,அதன்பிறகு கல்லூரி படிப்பை முடிப்பார், பின்னர் அவருக்கு வேலை கிடைத்துவிடும் வாழ்க்கை செட்டிலாகிவிடும் ஆனால் இனி அது அழிந்தவிடும் என தெரிவித்திருக்கும் அவர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கு எமனாக அமைந்திருக்கிறது என கூறுகிறார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்: படித்து பட்டம் பெறுவது, வேலைக்கு செல்வது என்ற மனநிலையில் இருந்து மாறி பட்டம் பெறுவது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்ற மனநிலைக்கு சென்றால் தான் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள முடியும் என அவர் கூறியிருக்கிறார் . அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோடிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட மாட்டார்கள் என சுட்டிக்காட்டி இருக்கும் சவுரப் முகர்ஜி உலகிற்கு தான் இது ஐந்தாண்டுகள் இந்தியாவிற்கு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே இந்த பிரச்சனை வந்துவிடும் எனக் கூறியிருக்கிறார் .இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இந்தியர்கள் நிதி ரீதியாக தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இப்பொழுது கண் விழிக்கவில்லை என்றால் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications