நமக்கு முந்தைய தலைமுறை ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அதற்கான பணத்தை சேமித்து வைத்த பிறகு தான் வாங்க முடியும் . ஆனால் நாம் ஈஎம்ஐ அல்லது கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்குகிறோம். இந்தியாவில் தற்போது எளிதாக கடன் கிடைக்கிறது.
இந்த போக்கு மிடில் கிளாஸ் மக்களை கடன் எனும் மிகப்பெரிய வலையில் சிக்க வைத்திருப்பதாக Marcellus Investment Managers நிறுவனர் சௌரப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி முகர்ஜி வெளியிட்டுள்ள தகவலில் 5 லிருந்து 10% இந்திய மிடில் கிளாஸ் மக்கள் தற்போது கடன் வலையில் சிக்கி இருக்கின்றனர் என குறிப்பிடுகிறார். ஆண்டுதோறும் கடன் பிடியில் சிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் விகிதம் உயர்ந்து கொண்டு தான் போகிறது என கூறும் அவர் இதற்கு பல்வேறு காரணங்களை ஒரு முன்வைக்கிறார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கும் இவர், சமூகம் கொடுக்கக்கூடிய அழுத்தம், எளிதாக கடன் கிடைப்பது ஆகிய இரண்டும் தான் இதற்கு காரணம் எனக் கூறுகிறார். கொரோனா பெருந்தொற்றில் வீட்டிலேயே அடைந்திருந்த மக்களுக்கு வெளியே வந்த பிறகு எளிதாக கடன்கள் கிடைக்க தொடங்கி விட்டன. சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக எவ்வளவு கடன் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் இதற்கு முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிடுகிறார். அதாவது பலரும் தங்களுடைய ஆடம்பர வாழ்க்கை முறைகளை ,தாங்கள் செல்லும் ஆடம்பர சுற்றுலா உள்ளிட்டவற்றையும் ஆடம்பர பொருட்களையும் சமூக வலைதளங்களில் பதிவாக வெளியிடுகின்றனர் . இது மக்கள் மனதில் சம்பாதித்த பணத்தை செலவு செய்வது அல்லது கடன் வாங்கி சுற்றுலா செல்வது இவையெல்லாம் சாதாரணமான ஒன்றுதான் என்ற ஒரு மனநிலையை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார்.
சமூக வலைத்தளங்களில் காட்டப்படும் வீடியோக்களை கண்டு மக்கள் அது போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணுகிறார்கள் ஆனால் அதற்கான பணத்தை அவர்கள் சம்பாதிப்பது கிடையாது, கடனாக பெறுகின்றனர் என குறிப்பிடுகிறார். இந்தியாவில் கடன் வழங்கும் நடைமுறைகள் மிக மிக எளிதாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறியிருக்கும் அவர் பலரும் எந்தவித முன்யோசனையும் இன்றி கடன் வாங்க தொடங்கிவிட்டனர் என சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடுகிறார். இந்தியாவில் நிலுவையில் இருக்கும் கடன்களின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது கிரெடிட் கார்டுகள் பில்லை கட்டாமல் இருப்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அவர் குறிப்பிடுகிறார். அதே வேலையில் மக்களின் சேமிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில் இந்தியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்களிடம் இருக்கும் சேமிப்பு தொகை குறைந்துவிட்டது என்கிறார். மிடில் கிளாஸ் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஈஎம்ஐ மூலம் வாங்குகின்றனர் அவர்களிடம் எந்தவித சேமிப்பும் கிடையாது என குறிப்பிடுகிறார்.
இந்த விவகாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கும் அவர் வட்டி விகிதத்தில் 2% குறைப்பது, மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, 15% வரை ரூபாயின் மதிப்பை குறைய செய்வது ஆகிய மூன்று நடவடிக்கைகளை எடுத்தால் இந்த மிடில் கிளாஸ் மக்களிடம் இருக்கும் இந்த கடன் பிரச்சனைக்கு தற்போதைக்கு தீர்வு கிடைக்கும் என கூறுகிறார். இல்லை என்றால் இது ஒரு தொடர்ச்சியான சுழற்சியாக சென்று கொண்டே இருக்கும் அதாவது கடன் வாங்குவது அதனை திரும்ப செலுத்துவது மீண்டும் கடன் வாங்குவது என முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும் என எச்சரிக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications