உலகெங்கிலும் இருக்கும் பெரும் பணக்காரர்கள் பலரும் தங்களிடம் இருக்கும் கூடுதல் பணத்தை சொந்த நாட்டில் வரி செலுத்தாமல் தப்பிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கக்கூடிய வங்கிகளில் தான் டெபாசிட் செய்து வைப்பார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் , தொழிலதிபர்கள் என பலரும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை போட்டு வைக்கின்றனர். சுவிட்சர்லாந்தில் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு தங்களை பற்றிய விவரங்கள் வெளியே வராது என்பதும் இதற்கு ஒரு காரணம்.
சுவிஸ் வங்கிகளில் பதுக்கும் பணம்: இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் எவ்வளவு பணத்தை தங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கி இருக்கிறார்கள் என்ற தகவலை சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்தியர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கக்கூடிய வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்த விகிதம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கக்கூடிய வங்கிகளில் சுமார் 37,600 கோடி ரூபாயை டெபாசிட் செய்திருக்கின்றனர்.

ரகசியம் காக்கப்படும் தகவல்கள்: பொதுவாக சுவிட்சர்லாந்து அரசு தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், அவர்களுடைய பண பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கிடையாது. இவ்வாறு தங்களின் தகவல்கள் ரகசியம் ரகசியமாக வைக்கப்படுவதாலேயே பல்வேறு நாடுகளை சேர்ந்த பெரும் முதலாளிகள் தங்களுடைய பணத்தை இங்கே பதுக்குகின்றனர். இந்தியாவில் கூட பெரு முதலாளிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கின்றனர் என குற்றச்சாட்டு வைக்கப்படுவது உண்டு.
இந்தியாவில் கருப்பு பண விவகாரம்: இந்தியாவில் தேர்தல் காலங்களில் இது முக்கிய விவகாரமாக பேசப்படும். சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணம் என தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் பேசுவதை நாம் கேட்க முடியும். மத்திய அரசினை பொறுத்தவரை கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செலுத்தியுள்ள பணம் குறித்த விபரங்களை ஏற்கனவே கோரியிருந்தது. அதன்படி சுவிட்சர்லாந்து அரசு மூன்று முறை இது தொடர்பான பட்டியலை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.
3 மடங்கு இந்தியர்களின் பண பதுக்கல் உயர்வு: சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டு முதல் தனி நபர்கள், கிளை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் இந்தியர்கள் செலுத்தியுள்ள பணம் 37 , 600 கோடி என்றும் கடந்த ஆண்டை விட இது மூன்று மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் டெபாசிட் செய்துள்ள பணத்தின் மதிப்பு 3 , 675 கோடி ரூபாய் , அறக்கட்டளைகள் மூலம் 434 கோடி, பத்திரங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் மூலம் 1431 கோடி இந்தியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது.
முதலிடத்தில் பிரிட்டன்: 2023ஆம் ஆண்டில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யும் பணம் குறைந்த நிலையில் அடுத்த ஆண்டே 3மடங்கு அதிகரித்துள்ளது.சுவிஸ் நாட்டு வங்கிகளில் அதிக பணத்தை பதுக்கி வைத்துள்ள வெளிநாட்டவர்களின் பட்டியலில் பிரிட்டன் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் ,ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை முதல் 10 இடங்களில் இருக்கின்றன.
இரு நாடுகள் இடையே ஒப்பந்தம்: இந்த பட்டியலில் இந்தியா 2022 ஆம் ஆண்டு 44 வது இடத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு 67 வது இடத்திற்கு சென்று, 2024 ஆம் ஆண்டில் 48 வது இடத்திற்கு வந்துள்ளது. முன்னதாக சுவிஸ் அரசு தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியர்களின் பணத்தை கருப்பு பணம் என கருதக்கூடாது என தெரிவித்திருக்கிறது. ஏனெனில் இந்தியாவின் வரி ஏய்ப்பு நடவடிக்கைக்கு நாங்கள் அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என கூறியிருக்கிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே வரி விவகாரங்களில் தகவல் பரிமாற்றும் முறை நடைமுறையில் இருக்கிறது .
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications