பஹல்காம் தாக்குதலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்த இந்திய 5, பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. இதோடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அனைத்து படைகளையும் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பதற்றம் அடைந்த பாகிஸ்தான் ஏப்ரல் 24- 25 கராச்சி கடற்கரையில் அமைந்திருக்கும் தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone) 480 கிலோமீட்டர் வரையில் சென்று தாக்கும் திறன் கொண்ட சர்பேஸ் டூ - சர்பேஸ் ஏவுகணை சோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதற்குச் சத்தமே இல்லாமல் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி இந்தியக் கடற்படை ஒரு ஏவுகணையைச் சோதனை செய்து, அதை வீடியோவாகவும் வெளியிட்டு ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஆட்டத்தை முடித்துள்ளது.

இந்திய கடற்படையின் உள்நாட்டுத் தயாரிப்பான அதிநவீன ஏவுகணை ஐஎன்எஸ் சூரத் டெஸ்ட்ராயர் கப்பலில் இருந்து சீறிப்பாய்ந்து வானத்தைக் கிழித்துக்கொண்டு சென்ற வீடியோ தான் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங்.
வியாழக்கிழமை அரேபிய கடலில், கடல் மேற்பரப்பில் வேகமாகவும் குறைந்த உயரத்தில் வரும் ஏவுகணையை எதிர்த்து தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்து அசத்தியுள்ளது கடற்படை. இந்த சோதனை, இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ஏவுகணை வைத்துத் தாக்கினால் அதை எளிதாக எங்களுடைய ஏவுகணை அடித்து நொறுக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளது.
ஐஎன்எஸ் சூரத்: இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு முக்கிய போர்க்கப்பலாகும். வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில், ஐஎன்எஸ் சூரத் ஒரு அதிவேக, குறைந்த உயர இலக்கு ஏவுகணையைத் துல்லியமாக தடுத்து அழித்துள்ளது. இதன் மூலம் இந்திய கடற்படையின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பாதுகாப்பு திறன்களை உலகிற்கு எடுத்துக்காட்டியது.
இந்த சோதனை, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியக் கடற்படையின் இந்த வெற்றி, நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications