நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில் ஆறு முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் 58 சதவீதம் குறையலாம் என்கிறது ஒர் அறிக்கை.
இது குறித்து வெளியான செய்தியில், 2020ம் ஆண்டில் 58 சதவீதம் குறைந்து, 3.4 மில்லியன் சதுர அடியாக இருக்கும் என்று சொத்து ஆலோசகரான சாவில்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

இது டெல்லி என் சி ஆர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே ஆகிய ஆறு முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டில் 8.1 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தினை நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்திருந்தன.
ஆனால் இதே நகரங்களில் நடப்பு ஆண்டில் 3.4 மில்லியன் சதுர அடியினை மட்டுமே நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது மொத்த அலுவலக நடவடிக்கையில் 11 சதவீத பங்கினை பதிவு செய்கிறது. ஆக ஒட்டுமொத்த குத்தகை செயல்பாடு 2019 ஆண்டை விட, 2020ம் ஆண்டில் கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அலுவலகங்களை குத்தகைக்கு எடுப்பதில் நிறுவனங்கள் முடிவெடுப்பதில் தாமதமாக உள்ளன என்றும் சாவில்ஸ் ஆலோசகர் கூறியுள்ளார்.
எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சீராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 2021ம் ஆண்டில் சுமார் 15 சதவீதம் வரை திரும்ப தயாராக உள்ளது. இதே 2022ம் ஆண்டில் இந்த விகிதம் 25 சதவீதம் வரை வளர்ச்சி காணலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் 6.1 மில்லியன் சதுர அடியில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு புறம் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக பல அலுவலகங்களில் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவித்து வருகின்றன. எனினும் இது இனி வரும் காலங்களில் அலுவலகத்திற்கு திரும்பும்போது, நிறுவனங்களுக்கு தேவை அதிகரிக்கலாம்.
இதனால் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அதிக இடமுள்ள அலுவலகங்களை தேடிப்பிடித்து, பணியை தொடங்கலாம். ஆக ஒருபுறம் வீட்டில் இருந்து பணி புரிவது இருந்தாலும், மறுபுறம் வலுவான வெளிப்பாடு இருக்கலாம் என்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சாவில்ஸ் தனது இந்திய நடவடிக்கைகளை கடந்த 2016ல் தான் தொடங்கியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications