சீன புறக்கணிப்பை கடுமையாக்கும் இந்தியா! இதிலும் சீன கம்பெனிகள் வேண்டாம் என திட்ட வட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் அண்டை நாடாகவும், வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில், அமெரிக்காவையே விரைவில் மிஞ்சக் கூடிய பலம் கொண்ட நாடாக இருக்கும் சீனாவை, இந்தியா தொடர்ந்து புறக்கணிக்க ஆரம்பித்து இருக்கிறது.

 

கல்வான் பள்ளாத்தாக்கு பகுதியில் நடந்த தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள், வீர மரணம் அடைந்தார்கள்.

இந்த உயிர் தியாகத்துக்குப் பின், சீன புறக்கணிப்பு உணர்வு, இந்திய வெகு ஜன மக்கள் மத்தியில் கூட புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த சீன புறக்கணிப்பு உணர்வை மத்திய அரசும் வெளிப்படுத்தத் தொடங்கியது.

சீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க!சீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க!

சீனாவுக்கு பதிலடி

சீனாவுக்கு பதிலடி

மத்திய அரசு, தன் நெடுஞ்சாலைத் திட்டங்களை சீன கம்பெனிகளுக்கு கொடுக்கப்படாது என்று சொன்னார்கள். இந்திய ரயில்வேஸ், சீன கம்பெனிகளுக்கு கொடுத்திருந்த சில ஒப்பந்தங்களைக் கூட ரத்து செய்தார்கள். சீன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த தர நிணயம் செய்ய பி ஐ எஸ் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

பலத்த அடி கொடுத்த இந்தியா

பலத்த அடி கொடுத்த இந்தியா

மிக முக்கியமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் மின்சார உபகரணங்களுக்கு கூடுதல் வரி விதித்து இருக்கிறது மத்திய அரசு. அதே போல டிக் டாக், யூ சி பிரவுசர் உட்பட, 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்காவையே அண்ணாந்து பார்க்க வைத்தது இந்தியா.

கச்சா எண்ணெய் கப்பல்
 

கச்சா எண்ணெய் கப்பல்

இப்போது மேலே சொன்ன சீன புறக்கணிப்பு, கச்சா எண்ணெய் விவகாரத்திலும் தலை எடுத்து இருக்கிறது. சீன கம்பெனிகள் இயக்கும் அல்லது சீன கம்பெனிகளுக்கு சொந்தமாக இருக்கும் எந்த கப்பலையும் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு பயன்படுத்தப் போவதில்லை என, அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம்.

கோரிக்கை வைக்க திட்டம்

கோரிக்கை வைக்க திட்டம்

இந்தியாவுக்கு, சீன கப்பல்களைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய்யை அனுப்ப வேண்டாம் என எண்ணெய் சப்ளையர்கள் மற்றும் கச்சா எண்ணெய் டிரேடர்களிடம், இந்திய எண்ணெய் கம்பெனிகள், கோரிக்கை வைக்க இருப்பதாகவும் ப்ளூம்பெர்க்கில் செய்திகள் கூட வெளியாகி இருக்கிறதாம். இன்னும் சீன புறக்கணிப்பை, இந்தியா எப்படி எல்லாம் செய்யப் போகிறதோ தெரியவில்லை.

சட்டத்தில் இடம் இருக்கா

சட்டத்தில் இடம் இருக்கா

First-right-of-refusal என ஒரு விதி குளோபல் டெண்டரில் இருக்கிறதாம். இந்த விதியின் படி, கச்சா எண்ணெய் போக்குவரத்து வேலைகளை முதலில் இந்திய கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டுமாம். இந்திய கம்பெனிகள் மறுக்கும் போது தான் மற்ற கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் சொல்லி இருக்கிறார்களாம். லிமிடெட் டெண்டர்களில் சீன கம்பெனிகளின் ஆஃபர்கள் வரவேற்கப்படாது என சொல்லி இருக்கிறார்களாம்.

சீனாவுக்கு பலமான நோ

சீனாவுக்கு பலமான நோ

எனவே, கச்சா எண்ணெய் கம்பெனிகள், முதலில் இந்திய கம்பெனிகளைக் கேட்கும். இந்திய கம்பெனிகள் டீல் ஒத்து வராமல் மறுத்தால், அதன் பிறகு மற்ற கப்பல் கம்பெனிகளிடம் பேசலாம். ஆனால் இனி சீன கம்பெனிகளிடமோ அல்லது சீனா உடன் தொடர்பு இருக்கும் கப்பல் கம்பெனிகளிடமோ பேச முடியாது.

சீனாவின் பங்கு என்ன

சீனாவின் பங்கு என்ன

இந்திய கச்சா எண்ணெய் கம்பெனிகளுக்கு, சீன கப்பல் கம்பெனிகள் குறைந்த அளவில் தான் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றனவாம். எனவே இந்தியாவின், இந்த புதிய சீன கப்பல் சேவை தடையால், எண்ணெய் கம்பெனிகளுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Oil companies to stop chartering Chinese tankers and vessels which have links with China

China boycott is escalating next levels in india. Indian Oil companies to stop chartering Chinese tankers and vessels which have links with China.
Story first published: Thursday, August 13, 2020, 13:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X