பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நாட்டின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் மார்கெட்டிங் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியை எண்ணெய் அமைச்சகம் தொடங்கியது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தற்போதைய தலைவரான எஸ்.எம்.வைத்யாவின் பதவி ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்குப் பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்பதாலேயே இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய தலைவரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியத் தலைவர் மல்லிகா சீனிவாசன், எண்ணெய் செயலர் பங்கஜ் ஜெயின், ரத்னகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் சுரானா ஆகியோர் அடங்கிய குழு தற்போது இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கான புதிய தலைவரை தேடும் பணியிலும், இப்பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரரை மதிப்பீடு செய்யவும் உள்ளது.
பொது தேர்தல் தீர்ப்பு வெளியான நாளன்று புதிய இந்தியன் ஆயில் சேர்மன் பணிக்கான விளம்பரம் வந்ததால் சில தொழில் அதிபர்கள் குழப்பத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு தேர்வுக் குழு அமைக்கப்பட்டது, ஆனால் தற்போதுதான் அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தற்போதைய தலைவரான எஸ்.எம்.வைத்யாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்காதது பெட்ரோல், டீசல் விலை குறைப்பைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வைத்யா அவர்களுக்கு 61 வயதாகிறது என்பதால் மீண்டும் பதவி நீட்டிப்பு பெறத் தகுதி இழக்கிறார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஓசி தலைவராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில், மத்திய அரசு தலையிட்டு மிகவும் அரிதாகப் பதவி நீட்டிப்பு பெற்ற நிலையில், அதே பதவியில் அடுத்த ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். வைத்யாவின் பதவிக்காலம் இந்த ஆகஸ்ட்டில் முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications