இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அடுத்த 10 வருடத்தில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் மற்றும் எரிபொருள் வாகனங்களுக்கும் அதை சார்ந்த துறையிலும் கவனம் செலுத்தி வரும் வேளையில் இந்திய ஆயில் அறிவிப்பு வியப்பு அளிக்கிறது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அடுத்த 10 வருடத்தில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் இந்தியன் ஆயில் 360 டிகிரி எனர்ஜி கம்பெனியாக மாற உள்ளதாக IOCL சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் தெரிவித்தார்.

இந்த மாபெரும் முதலீட்டு திட்டத்தில் இந்தியன் ஆயில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்து எரிபொருளாக மாற்றுவதற்காக முதலீடு செய்ய உள்ளது, 2.4 லட்சம் கோடி ரூபாயை நிறுவனம் நெட் ஜீரோ கார்பன் இலக்கை அடைவதற்காக முதலீடு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள 60000 கோடி ரூபாயை ஒடிசா-வில் மிகப்பெரிய பெட்ரோகெமிக்கல் காம்பிளக்ஸ் உருவாக்குவதற்காக முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீடுகள் அனைத்தும் இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் சேவையை பூர்த்தி செய்யும், இது கட்டாயம் வேகமாக வளரும் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் உதவும் என கணிக்கப்படுகிறது. இந்த முதலீட்டின் வாயிலாக இந்தியன் ஆயில் எனர்ஜி டிரான்ஸ்சிஷன் பாதையும் அமைக்க உள்ளதாக பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய எரிபொருள் சந்தை எப்போதும் இல்லாமல் அதிகப்படியான வளர்ச்சியை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இத்துறையில் இந்தியன் ஆயில் பங்கீட்டை 9 சதவீதத்தில் இருந்து 2050 ஆம் ஆண்டுக்குள் 12.5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்துடன் அடுத்த 30 வருடத்திற்கான பாதையை வகுத்துள்ளது இந்தியன் ஆயில்.
மேலும் இந்த முதலீட்டில் கிரீன் ஹைட்ரஜென் வாயு தயாரிக்கும் திட்டத்திற்கான முதலீடும் உள்ளது, இதேபோல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பியோ ஃபியூயல், கார்பன் ஆஃப்செட்டிங் ஆகியவையும் உள்ளது. மேலும் இந்தியா முழுக்க EV சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications