ரஷ்யா அரசு இந்தியாவுக்கு விற்பனை செய்யும் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் மூலம் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 2024 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டுமே சுமார் 3.3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை சேமித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான், சவுதி அரேபியாவை பின்னுக்குத்தள்ளி ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. உக்ரைன் போருக்கு முன்பு வரையில் ரஷ்யாவின் இறக்குமதி அளவு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

ஆனால் போருக்கு பின்பு விளாடிமிர் புதின் அரசு அதிரடி திட்டத்துடன் இந்தியாவுக்கான சப்ளையை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவுக்கு புதிய வழித்தடத்தை உருவாக்கி தொடர்ந்து இந்தியாவுக்கான இறக்குமதியை அதிகரித்து வருகிறது. இப்படி சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு 30 முதல் 40 சதவீதம் வரையில் தள்ளுபடியும் அளிக்கிறது.
ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்துள்ள மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்யாவின் பங்கீடு மட்டும் 39 சதவீதம், மதிப்பீடு அடிப்படையில் 36 சதவீதம். உலகின் 3வது கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இருக்கும் இந்தியா சுமார் 85 சதவீத தேவையை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது.
இந்த தள்ளுபடி வாயிலாக நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு சுமார் 27000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை தனியார் நிறுவனங்களும் இறக்குமதி செய்யும் காரணத்தால் இந்த 27000 கோடி ரூபாயில் தனியாருக்கும் கணிசமான பங்கு உள்ளது.
மத்திய அரசு நிதி நெருக்கடி இலக்கான 5.9 சதவீத ஜிடிபி அளவீட்டை எட்டுவதில் தடுமாறும் வேளையில் 3.3 பில்லியன் டாலர் அளவிலான சேமிப்பு பெரும் உதவியாக இருக்கும்.
இந்திய பொருளாதார வளர்ச்சி-க்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதி வாயிலாக மட்டுமே பூர்த்தி செய்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக சவுதி அரேபியா, ஈரான், பிற வளைகுடா நாடுகளிடம் இருந்து வாங்கி வந்தது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் ரஷ்யா ஐரோப்பிய சந்தைக்கு கச்சா எண்ணெய் சப்ளையை மொத்தமாக நிறுத்திய நிலையில் இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய துவங்கியது. இதற்கு தற்போது பெரிய அளவில் பலன் கிடைத்துள்ளது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications