இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில கச்சா எண்ணெய்-க்கு டாலர், யூரோ நாணயங்களில் பணத்தை செலுத்தாமல் சீன நாட்டின் நாணயமான யுவான் மூலம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க பல நாடுகள் ஒன்றிணைந்துள்ளது மட்டும் அல்லாமல் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ய திட்டமிட்டும் அனைத்து நாடுகளும் டாலர் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வர தனது சொந்த நாணயத்தையோ அல்லது சீனா யுவான் ஆகியவைற்றை வெளிநாட்டு இறக்குமதிக்கு பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் பல மாதங்களாக போராடி இருநாடுகள் மத்தியிலான வர்த்தகத்திற்கு சொந்த நாணயங்களை பயன்படுத்த Nostro, vostro கணக்குகள் திறக்கப்பட்டது. ஆனால் சில முக்கிய காரணங்களுக்காக இந்தியா- ரஷ்யா இதற்கான பேச்சுவார்த்தையை நிறுத்தியது.
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மீது டாலர் மதிப்பிலான பரிமாற்றத்திற்கு மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், ரஷ்யா உடனான பரிமாற்றத்திற்கு இந்தியா சில வாரங்களுக்கு முன்பு வரையில் யூரோ பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது சீனா-வின் யுவான் பயன்படுத்தப்பட உள்ளது.
ஜூன் மாதத்தில், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி புதிய வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. Kpler நிறுவனத்தின் கச்சா ஆய்வுகளின் படி அதன் தலைவரான விக்டர் கட்டோனா ஜூன் மாதம், இந்திய ஒரு நாளுக்கு 2.2 மில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி செய்துள்ளது. இதில் 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவில் இருவ்து மட்டுமே இறக்குமதி செய்துள்ளது என விக்டர் கட்டோனா தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் இறக்குமதிக்கு தற்போது இந்தியா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சீன யுவான் வாயிலாக பணத்தை செலுத்தி வருகிறது. இதன் மூலம் டாலர் ஆதிக்கத்தை இந்தியா தனது பங்கிற்கு குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications