நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 13 மடங்கு ஒருங்கிணைந்த நிகரலாபம் அதிகரித்து, 6,025.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கு எண்ணெய் இருப்புகள் வெகுவாக உதவியதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 468.04 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் சற்று குறைவு தான்
இதே லாபம் அதிகரித்துள்ள போதிலும், ஒருங்கிணைந்த வருவாய் 13.39 சதவீதம் குறைந்து 1.17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.35 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மற்ற வருவாய் விகிதம் 1,157.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 449.09 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முழுமையான நிகரலாபம்
முழுமையான அடிப்படையில் இந்த எண்ணெய் நிறுவனத்தின் நிகரலாபம் 10 மடங்கு அதிகரித்து, 6,227.31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் 563.42 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே செயல்பாடுகளின் மூலம் வருவாய் 1.15 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேரலுக்கு லாபம்
சராசரி சுத்திகரிப்பு அளவு, கச்சா எண்ணெய் பதப்படுத்தப்பட்ட விலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் விலைகள், ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம், ஏப்ரல் - செப்டம்பர் 2020ல் ஒரு பேரலுக்கு 3.46 டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டில் பேரலுக்கு 2.94 டாலராக இருந்தது.
அதிகரித்து வரும் தேவை
எரிபொருள் விற்பனையானது முந்தைய காலாண்டினை விட, 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் ஜூலை செப்டம்பர் 2019 காலாண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் குறைந்து, 20.17 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் இரண்டாவது காலாண்டில் கிட்டதட்ட 14 மில்லியன் டன் எண்ணெயை சுத்திகரிப்பு செய்துள்ளது.
ஐஓசியின் பங்கு விலை
இதுவே கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 13 மில்லியன் டன்னாக இருந்தது கவனிக்கதக்கது. எனினும் கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 17.5 மில்லியன் டன்னாக சுத்திகரிப்பு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications