இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு எரிபொருளும், எரிபொருள் நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையிலும், இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு அதிகளவில் உலக நாடுகளை நம்பியிருக்கும் நிலையில் எரிபொருள் செலவுகளைக் குறைக்கப் பல முக்கியமான முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது கிளீன் எனர்ஜி அல்லது கிரீன் பியூயல் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பசுமை எரிபொருள்
இந்தியாவில் பசுமை எரிபொருள் வர்த்தகத் துறை மிகப்பெரிய வர்த்தகமாக மாறி வரும் நிலையில் தனியார் நிறுவனங்கள் முதல் பொதுத்துறை நிறுவனங்களும் போட்டிப்போடத் தயாராகியுள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயில் மார்கெட்டிங் கம்பெனியான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் மாற்று எரிசக்திக்கான வர்த்தகத்திற்காகத் தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிளீன் எனர்ஜி
இந்தக் கிளீன் எனர்ஜி பிரிவில் பல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப் எனப் பல நிறுவனங்கள் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி பெரிய அளவிலான வர்த்தகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து வரும் நிலையில் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பொதுத்துறை நிறுவனங்களும் போட்டிப்போட வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன்
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் ஏற்கனவே பயோபியூயல், பயோகேஸ், கிரீன் ஹைட்ரஜென், எலக்ட்ரிக் மொபிலிட்டி, எலக்ட்ரிக் பேட்டரி போன்ற பலவற்றில் இறங்கியும் விரிவாக்க பணிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் தனி நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் எளிதாக வர்த்தகத்தையும் உற்பத்தியையும் நிர்வாகம் செய்ய முடியும்.
கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி
இந்தியன் ஆயில் கார்ப் தற்போது கிரீன் ஹைட்ரஜென் தயாரிப்பில் இறங்கியுள்ளது, தற்போது 2027-28க்குள் மொத்த ஹைட்ரஜென் உற்பத்தியில் 5 சதவீதம் கிரீன் ஹைட்ரஜென் ஆகவும், 2029-30ல் 10 சதவீதம் ஹைட்ரஜென் ஆக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
புதிய நிறுவனம்
இந்தியன் ஆயில் கார்ப் இந்தப் புதிய நிறுவனத்தை அடுத்த ஆண்டு உருவாக்க உள்ளதாகவும், இதற்கான விவாதம் மற்றும் முடிவுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய முயற்சிகள்
இந்திய ஆயில் விவசாயக் கழிவுகளில் இருந்து 2ஜி எத்தனால், ஆட்டோமொபைல் துறைக்காகப் பியூயல் செல் டெக்னாலஜி, சோலார் பவர் மூலம் பயோடீசல் தயாரிப்பு, எனர்ஜி ஸ்டோரேஜ் டிவைஸ் ஆகியவற்றைத் தயாரிக்கும் முயற்சியில் உள்ளது.
ரினியூவபிள் எனர்ஜி
மார்ச் 2022 தரவுகள் படி இந்தியன் ஆயில் கார்ப் 237.42 மெகாவாட் ரினியூவபிள் எனர்ஜி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் 167.6 மெகா வாட் காற்றாலை மின்சாரம், 69.82 மெகாவாட் சோலார் போட்டோவோல்டாயிக் தளமாகும்.
21,228 கோடி ரூபாய் நஷ்டம்
ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களான (OMCs) ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) உள்ளிட்ட நிறுவனங்கள், 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 21,228 கோடி ரூபாய் நஷ்டத்தைக் கண்டுள்ளன.
இந்தியன் ஆயில்டேக்கிங் நிறுவனம்
நவம்பர் மாதம் அதானி போர்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்பரேஷன் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில்டேங்கிங் GMBH இணைந்து 1996ல் உருவாக்கப்பட்ட இந்தியன் ஆயில்டேக்கிங் என்னும் நிறுவனத்தின் 49.3 சதவீத பங்குகளைச் சுமார் 1,050 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications