இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஈரானில் நடைபெறக்கூடிய போர் இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான சாமானிய மக்கள் தொடங்கி பெரிய பெரிய நிறுவனங்கள் வரை மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. எங்கோ ஒரு நாட்டில் யாரோ இருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என நம்மால் இருந்துவிட முடியாது. ஏனெனில் அங்கே எத்தனை நாட்கள் போர் நீடிக்கிறதோ அதைவிட அதிகமான நாட்களுக்கு அதன் வலியை நாம் உணரப் போகிறோம்.
சாமானிய மக்களை பொருத்தவரை வீட்டுக்கு தேவையான சிலிண்டர் கிடைப்பது தாமதம் ஆகிறது, ஹோட்டல் சாப்பாடு கிடைக்காத சூழல் வந்துவிட்டது, ஆட்டோக்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்துவிட்டது, டீக்கடைகளில் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தி விட்டார்கள். ஆங்காங்கே செயல்படக்கூடிய சில உணவகங்களிலும் உணவின் விலையை உயர்த்தி விட்டார்கள் அதேபோல குறைந்த எண்ணிக்கையிலான உணவுகள் தான் விற்பனைக்கு வருகின்றன.

நிறுவனங்களை பொறுத்தவரை இந்த பாதிப்பு இன்னும் அதிகம. ஏராளமான நிறுவனங்களுக்கு எல்பிஜி கிடைக்காததால் தொழிலே செய்ய முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க எல்பிஜி அடுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து டேங்குகளை நிரப்பி கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.
தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்ததால் ஒரே நாளில் பெட்ரோல் விற்பனை 100% டீசல் விற்பனை 75 சதவீதமும் அதிகரித்தது என சொல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்திருப்பதால் இந்த நிறுவனங்களுக்கு நல்ல லாபம் என நாம் நினைப்போம். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாறியாக நிற்கிறது. சிஸ்டமேட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இந்திய எண்ணெய் விநியோக நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்திருப்பதாக கூறுகிறது.

இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் தலா 20 ரூபாயும் ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் தலா 45 ரூபாயும் நஷ்டமடைகின்றனவாம். தினம்தோறும் இந்த நிறுவனங்கள் 2000 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுகின்றன என அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது. பெட்ரோல் விற்பனையில் 1650 கோடி , டீசல் விற்பனையில் 350 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என கூறுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு விட்டது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். போர் காரணமாக கச்சா எண்ணெய் கொண்டு வரக்கூடிய செலவு என்பது இந்த நிறுவனங்களுக்கு அதிகரித்துவிட்டது. காப்பீட்டு பிரீமியம் அதிகரித்துவிட்டது , சரக்குகளின் கட்டணம் அதிகரித்து விட்டது என சிஸ்டமேட்டிக்ஸ் நிறுவனம் கூறுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் உயர்ந்திருப்பதும் ஒரு காரணம்.
இதற்கு முன்பு இந்திய நிறுவனங்களுக்கு சந்தை விலையில் இருந்து தள்ளுபடி விலைக்கு கச்சா எண்ணெய் கொடுத்து வந்த ரஷ்யா, அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டதால் தற்போது சந்தையை விலையை விட கூடுதலாக எண்ணெய் விற்பனை செய்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 20 ரூபாய் நஷ்டமும் ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 45 ரூபாய் நஷ்டமும் ஏற்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
அதேபோல எல்என்ஜி விலையும் 50% உயர்ந்திருக்கிறதாம். இந்தியாவிற்கு எல்என்ஜி விநியோகம் செய்து வரக்கூடிய கத்தார் அதன் விலையை இந்த ஒரு மாத காலத்தில் 50 சதவீதம் அதிகரித்து விட்டதாம். எனவே எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு இது மிக மோசமான காலம் என சிஸ்டமேட்டிக்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. அரசு வரி சலுகை ஏதேனும் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு இல்லாமல் காக்கும் தென்னிந்தியா: பூமிக்கடியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம்

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

தமிழ்நாட்டில் எத்தனை நாட்களுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளது? – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தகவல்

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

உலகளாவிய எரிசக்தி போட்டி: டாப் 10 பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளதா? வல்லரசுகளுடன் ஒரு ஒப்பீடு!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!



Click it and Unblock the Notifications

