அமெரிக்காவின் மிகப்பெரிய ஷார்ட் செல்லர் மற்றும் நிதியியல் சந்தை தடவியல் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், ஜாக் டோர்சி தலைமையிலான பேமென்ட் நிறுவனமான பிளாக் இன்க்-க்கு குறித்து பல குற்றச்சாட்டுகளை நிறைந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
நேதன் ஆண்டர்சனின் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் இன்று காலையில் டிவிட்டரில் அடுத்த பெரிய நிறுவனம் குறித்து ரிப்போர்ட் தயாரித்து வெளியிட தயாராக உள்ளது என அறிவித்தது. மீண்டுமொரு இந்திய நிறுவனத்தை டார்கெட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி-யின் பிளாக் இன்க் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது.
பிளாக் இன்க் நிறுவனத்தின் இந்திய-அமெரிக்க CFO அம்ரிதா அஹுஜா நிறுவனத்தின் பங்குகளை வேண்டுமென்றே விற்பனை செய்ததாக ஹிண்டன்பர்க் தெரிவித்த நிலையில் தற்போது அம்ரிதா அஹுஜா கண்காணிப்புக்கு கீழ் வந்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
வியாழக்கிழமை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் பிளாக் இன்க் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஜாக் டோர்சி மற்றும் ஜேம்ஸ் மெக்கெல்வி, தலைமை நிதி அதிகாரி அம்ரிதா அஹுஜா மற்றும் கேஷ் ஆப்-ன் முதன்மை மேலாளர் பிரையன் கிராஸடோனியா ஆகியோர் மீது பல மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை டம்ப் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச்.
பிளாக் நிறுவனம்
பிளாக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்நிறுவனத்தில் செய்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் செய்யப்பட்ட மோசடி மூலம் பெரிய அளவில் உயர்ந்ததால், இணை நிறுவனர்களான ஜாக் டோர்சி மற்றும் ஜேம்ஸ் மெக்கெல்வி ஆகியோர் கொரோனா தொற்றுநோய் காலத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை திட்டமிட்டு விற்றனர்.
அம்ரிதா அஹுஜா
CFO அம்ரிதா அஹுஜா மற்றும் Cash App பிரையன் கிராசடோனியா-வின் முன்னணி மேலாளர் உட்பட மற்ற நிர்வாகிகளும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான பங்குகளை இந்த மோசடியை பணமாக்க முயற்சித்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மோசடி செய்துள்ளனர் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை கூறியது. யார் பிளாக் நிறுவனத்தின் CFO அம்ரிதா அஹுஜா ..?
இந்திய-அமெரிக்கர்
இந்திய-அமெரிக்கரான அம்ரிதா அஹுஜா பிளாக் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் ஆவார். அவர் இந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுவனத்தின் CFO ஆக உயர்ந்தார், மேலும் அம்ரிதா அஹுஜா பிளாக் இன்க் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஜாக் டோர்சி மற்றும் ஜேம்ஸ் மெக்கெல்வி ஆகியோர் உடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.
முன்னணி பல்கலைக்கழக
அம்ரிதா அஹுஜா லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், டியூக் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் போன்ற முன்னணி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 2019 இல் அம்ரிதா அஹுஜா பிளாக் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, அவர் Airbnb, McKinsey & Company, The Walt Disney Company போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
மோர்கன் ஸ்டான்லி
அவர் 2001 இல் ஆலோசனை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லியுடன் முதலீட்டு வங்கியாளராக தனது பணியை தொடங்கிய அம்ரிதா அஹுஜா, தற்போது பிளாக் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் ஒருவராக இருப்பது மட்டும் அல்லாமல் பெரும் மோசடியிலும் மாட்டிக்கொண்டு உள்ளார்.
அம்ரிதா அஹுஜா பெற்றோர்
அம்ரிதா அஹுஜா குடும்பம் கிளீவ்லேண்டின் புறநகரில் ஒரு டே கேர் சென்டரை நிர்வாகம் செய்து வந்தாகவும், அதில் இருந்து வளர்ந்தவர் தான் இவர். மேலும் 2022 Fortune's Most Powerful Women பட்டியலில் அம்ரிதா அஹுஜா இடம்பெற்றார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications