சிங்கப்பூர்: இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்றவருமான பாலாஜி சீனிவாசன் சிங்கப்பூர் டெக் நிபுணர்களுக்கு என ஒரு தனி தேசத்தை உருவாக்கி வருகிறார்.
காயின்பேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர் தான் பாலாஜி சீனிவாசன் இவர் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருக்கும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். டெக் துறையில் மிகவும் புகழ்பெற்ற ஒரு நபராக பாலாஜி சீனிவாசன் இருந்து வருகிறார். இவர் சிங்கப்பூருக்கு அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

இந்த தீவினை தொழில் நுட்பத் துறை சார்ந்த நிபுணர்களுக்கான ஒரு தேசமாக மாற்ற இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இதற்கு நெட்வொர்க் ஸ்டேட் என அவர் பெயர் சூட்டி இருக்கிறார். இந்த தீவானது தி நெட்வொர்க் ஸ்கூல் என்ற ஒரு அமைப்பை கொண்டிருக்கும். அதாவது தொழில் முனைவு, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மாற்றங்களை எதிர்பார்க்கும் நபர்களை இந்த தீவிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இந்த திட்டத்திற்கு நெட்வொர்க் ஸ்கூல் என அவர் பெயர் சூட்டி இருக்கிறார் . புதிய தொழில் யோசனைகளோடு இருக்கும் நபர்களை தேர்ந்தெடுத்து இங்கே அழைத்து வந்து தொழில் உலகத்தில் கால் பதிக்க தேவையான அனைத்து பயிற்சிகளும் நெட்வொர்க்கிங் உள்ளிட்ட வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவோம் என அவர் கூறியிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த வகுப்புகளில் இவர்கள் கலந்து கொள்வார்கள் .
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் அவர் பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் தி நெட்வொர்க் ஸ்கூல்-இல் செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து வகுப்புகள் தொடங்குகின்றன விண்ணப்பம் செய்யுங்கள் என அவர் கூறியுள்ளார். நமக்கென ஒரு தீவு கிடைத்திருக்கிறது , ஆம் பிட்காயினின் சக்தியால் நாம் சிங்கப்பூருக்கு அருகே மிக அழகான ஒரு தீவை வாங்கி இருக்கிறோம் , அந்த தீவில் தான் தி நெட்வொர்க் ஸ்கூல் என்று அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என அவர் கூறியிருக்கிறார். முதலில் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரையிலான 90 நாட்களுக்கு இங்கே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதத்திற்கு ஆயிரம் டாலர்கள் என்ற அளவில் இங்கே வாடகை வசூல் செய்யப்படும் , இந்த திட்டத்தில் கலந்து கொண்டு தொழில்முனைவு வாய்ப்பு பெற வேண்டும் என விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள் என அவர் கூறியிருக்கிறார். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் மற்றும் புதிய யோசனைகளை கொண்டு வரும் நபர்களுக்கு என எல்லையே இல்லாத ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கண்டிருந்தவர் பாலாஜி.
2022 ஆம் ஆண்டு அவர் தி நெட்வொர்க் ஸ்டேட் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார் .அந்த புத்தகத்தில் கூட தன்னுடைய விருப்பம் குறித்து கூறியிருந்தார். முதலில் டெக் சார்ந்த நிபுணர்களுக்கு தங்களை தாங்களே அவர்கள் மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் அவர்களுக்கின ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் சர்வதேச அளவில் அந்த தேசத்திற்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என அந்த புத்தகத்தில் அவர் கூறியிருந்தார்.
பாலாஜி சீனிவாசனின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். பாலாஜி சீனிவாசனை பொருத்தவரை எலக்ட்ரிக்கல் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார் . கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் முக்கியமான பதவிகளில் வேலை செய்து இருக்கிறார் . இது தவிர பிட்காயின், எரிதிரியம் ஆகியவற்றில் அதிகமாக முதலீடு செய்திருக்கிறார் .
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications