பலருக்கும் செல்லப் பிராணிகள் இஷ்டமானதாக இருக்கும். அதற்காக தேடித்தேடி பார்த்து உணவு பொருட்களை வாங்குவது, மேட் வாங்குவது, தூங்குவதற்கு மெத்தை வாங்குவது என அதை வளர்க்கும் உரிமையாளர்கள் தனி பராமரிப்பை செய்வது வழக்கம். அப்படி தனது செல்ல பிராணிக்கு ரூ. 14 லட்சம் மதிப்புள்ள "போன் ட்ரங்க்" எனப்படும் லூயிஸ் உய்ட்டன் டாக் சூட்கேஸை வாங்கியுள்ளார்.
டாக்டர் மல்டி மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான அஜய் தாகூர் தனது செல்லப்பிராணிக்காக ரூ. 14 லட்சத்திற்கு சூட்கேஸ் வாங்கி அதை வீடியோவாக தனது சோசியல் மீடியா பகிர்ந்தார். ஏஸ் ரோஜர்ஸ் என்று அழைக்கப்படும், இவர் வீடியோவை பகிர்ந்ததிலிருந்து பலரும் செல்லப் பிராணிக்காக ஆடம்பரமாக செலவழிப்பதற்கு பதிலாக காப்பகத்திற்கு அதை நன்கொடையாக வழங்கி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"நாளை என்பதே இல்லை என்பது போல செலவிட வேண்டும். $20k மதிப்பிலான "லூயிஸ் உய்ட்டன் போன் ட்ரங்க்" என்று கேப்ஷன் கொடுத்து அஜய் தாகூர் வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் லூயிஸ் உய்ட்டன் ஸ்டோருக்குள் நுழைவதையும், அங்குள்ள ஊழியர்கள் அவரை வரவேற்பதையும் காண முடிகிறது.
அப்போது அஜய் தாகூர் நகைச்சுவையாக தன் நாய்க்குட்டிக்கு எதையாவது வாங்க வேண்டும் என்று வந்ததாகக் கூறுகிறார். பிறகு இந்த தொழிலதிபர் என்ன பொருளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ வலைதளங்களின் படி அவர் வாங்கிய லூயிஸ் உய்ட்டன் போன் ட்ரங்க்கின் விலை ரூ.14,10,000.
போன் ட்ரங்க் என்றால் என்ன?: போன் ட்ரங்க் என்பது அழுத்தமான சூட்கேஸ். பார்ப்பதற்கு எலும்பை போன்ற வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சூட்கேஸை திறக்கும் போது உள்ளே 2 பவுல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீரோ அல்லது உணவோ வைத்து நாய் குட்டிக்கு வழங்கலாம். அஜய் தாகூர் பகிர்ந்த வீடியோவுக்கு 1.7 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்கள் கிடைத்துள்ளது. அதோடு பல லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.
பலரும் ரூ.14 லட்சம் கொடுத்து செல்லப்பிராணிக்கு சூட்கேஸ் வாங்கியதை விட அவற்றை இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் என்று கமெண்ட் செய்திருந்தனர். அதில் சில கமெண்ட்ஸ்களுக்கு அஜய் தாகூர் ரிப்ளையும் செய்திருந்தார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications