அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தலைமை செயல் அதிகாரி தங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர விரும்புபவர்கள் வாரத்தில் 84 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறி பெரும் பிரச்சனையில் சிக்கி உள்ளார்.
தக்ஸ் குப்தா என்பவர் Greptile என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் அண்மையில் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தங்களுடைய நிறுவனம் ஒர்க் லைஃப் பேலன்ஸ் எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கு இடையிலான சமநிலையை விரும்புவதில்லை என கூறி இருந்தார்.

அதாவது தன்னுடைய நிறுவனத்தில் வேலை தேடி விண்ணப்பம் செய்தவர்களுக்கெல்லாம் அவர் தொடக்கத்திலேயே நிறுவனத்தில் காலை 9 மணிக்கு வேலை ஆரம்பித்தால் இரவு 11 மணி வரை வேலை செய்ய வேண்டும், சில சமயங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாங்கள் முழு நேரம் வேலை செய்வோம் என கூறிவிடுவாராம்.
மேலும் தங்களுடைய நிறுவனத்தில் அதிக செயல்திறன் கொண்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிக வேலைப்பளு இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருந்தால் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்வது தொடர்பாக உங்களை நேர்காணல் செய்கிறோம் என அவர் கூறிவிடுவாராம்.
தன்னுடைய நிறுவனம் குறித்த ஒரு தெளிவான பார்வையை நான் முன்கூட்டியே கூறிவிடுவேன், மற்ற நிறுவனங்களிலும் இதனையே பின்பற்றுகிறார்களா இல்லை நான் தான் இவ்வளவு வெளிப்படையாக இருக்கிறேனா என அவர் கேட்டிருந்தார்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால் அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமானவர்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். குப்தாவின் செயலை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். நீங்கள் ஒரு மோசமான பணி சூழலையும் பணி கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கிறீர்கள் என பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனநிலை தவறானது என்றும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர் .
சிலர் நீங்கள் இவ்வளவு வெளிப்படையாக பேசியதற்கு நன்றி என்றும் கூறியுள்ளனர். சிலர் இது நவீன கால அடிமைத்தனம் என பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் குப்தா மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில் வாரத்திற்கு 84 மணி நேரம் வேலை என்ற அந்த பதிவு வெளியானதை அடுத்து தன்னுடைய இன்பாக்ஸில் 20 சதவீதம் கொலை மிரட்டல்களும் 80 சதவீதம் வேலைக்கான விண்ணப்பங்களையும் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நான் என்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய நிறுவனம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடக்க நிலையில் இப்படித்தான் இருக்கும் அதில் பணிபுரிபவர்கள் கடின உழைப்பை வழங்கி தான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். நிறுவனம் ஓரளவு வளர்ச்சி அடைந்த பிறகு இந்த நிலை மாறும் என விளக்கியுள்ளார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications