உலகை ஆளும் இந்திய வம்சாவளி தலைவர்கள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அவர் வேறு நாட்டினை சேர்ந்த குடிமகனாக இருந்தாலும், அவர் இந்திய வம்சாவளியினை சேர்ந்தவர் என்பதால் இந்திய மக்களால் கொண்டாடப்படுகின்றார்.

ஆனால் ரிஷி சுனக்கினை போல உலக அளவில் இந்திய வம்சாவளியினை சேர்ந்தவர்கள், முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இதில் கமலா தேவி ஹாரிஸ்,ஹலிமா யாக்கோப் உள்ளிட்ட பெண்களும் அடங்குவர்.

கமலா தேவி ஹாரிஸ்

கமலா தேவி ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றவர் கமலா தேவி ஹாரிஸ். இவரும் இந்திய வம்சாவளியினை சேர்ந்தவராவார். கமலா ஹாரீஸ் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு துணை அதிபராக வெற்றி கண்டவர். கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாயார் இந்தியர் ஆவார். கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரீஸ் தான்.

முகமது இர்பான் அலி

முகமது இர்பான் அலி

கரீபியன் தீவு நாடான கயானாவின் அதிபர் முகமது இர்பான் அலி. இவரும் இந்திய வம்சாவளியினை சேர்ந்தவர். முகமது இர்பானின் மூதாதையர்கள் கூலி வேலைக்காக கரீபியனுக்கு சென்றவர்கள் என கூறப்படுகின்றது. முகமது இர்பான் ஆகஸ்ட் 2020ல் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தார்.

அன்டோனியோ கோஸ்டா

அன்டோனியோ கோஸ்டா

போர்ச்சுகலில் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, இவரின் தாத்தா இந்தியாவை (கோவா) சேர்ந்தவர். அன்டோனியோ கோஸ்டாவின் தாத்தா பெயர் லூயிஸ் அபோன்சோ மரியா டி கோஸ்டா. அன்டோனியோ கோஸ்டா கடந்த நவம்பர் 26, 2015ல் இருந்து பிரதமராக இருந்து வருகின்றார்.

சந்திரிகாபெர்சாத் சந்தோகி

சந்திரிகாபெர்சாத் சந்தோகி

சந்திரிகாபெர்சாத் சந்தோகி 2020ம் ஆண்டு முதல் சூரினாமின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றுபவர். இவருக்கு முன்பே 4 ஜனாதிபதிகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

பிரவிந்த் ஜக்நாத்

பிரவிந்த் ஜக்நாத்

மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆவார். மொரீஷியஸில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஜக்நாத், 2017ம் ஆண்டு முதல் மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் இருந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் வாதியாவார்.

பிருத்விராஜ் சிங் ரூபன்

பிருத்விராஜ் சிங் ரூபன்

மொரீஷியஸ் நாட்டின் தலைவர் பதவியில் இதுவரை 9 முறை இந்திய வம்சாவளியினை சேர்ந்தவர்கள் வகித்துள்ளனர். மொரீஷியஸ் நாட்டின் தற்போதைய அதிபர் பிருத்விராஜ் சிங் ரூபன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். பிரதமர் பிரவிந்தின் ஜக்நாத்தின் முன்னோர்களும் பீகாரை சேர்ந்தவர்கள்.

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

இந்திய வம்சாவளியினை சேர்ந்த ரிஷி சுனக் 42 வயதானவர், தற்போது இங்கிலாந்து பிரதமராவார். இவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். இவர் முதல் ஆசிய வம்சாவளி பிரதமராவார்.

ஹலிமா யாக்கோப்

ஹலிமா யாக்கோப்

சிங்கப்பூர் பெண் அதிபரான ஹலிமா யாக்கோப் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஜனாதிபதியான முதல் பெண் இவர்தான். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகரும் ஹல்மா யாக்கோப் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+