வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைப்பது என்பது ஒரு மர்மமான விஷயம். இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். சிலருக்கு இது அரிதான நிகழ்வாக இருந்தாலும், சிலருக்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்து தங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படித்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டியுள்ளது. சிங்கப்பூரில் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை வென்றுள்ளார். இது இந்திய மதிப்புக்கு ரூ.8 கோடி ரூபாய்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்தபா ஜுவல்லரி நடத்திய அதிர்ஷ்ட குழுக்கள் போட்டியில் சிங்கப்பூரில் 21 ஆண்டுகளாக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் சிதம்பரம் முதல் பரிசை பெற்றுள்ளார். பாலசுப்பிரமணியன் சிதம்பரம் தனது மனைவிக்காக லிட்டில் இந்தியாவில் உள்ள முஸ்தபா ஜுவல்லரியில் தோராயமாக 3,78,000 ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை வாங்கியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் வருடாந்திர நிகழ்வின் ஒரு பகுதியாக முஸ்தபா ஜுவல்லரியில் லக்கி ட்ரா நடத்தப்படும். ரூ.15,000-த்துக்கு மேல் நகைகள் வாங்குபவர்கள் இந்த லக்கி டிராவுக்கு தகுதி பெறுவார்கள். அதே போல தான் சிதம்பரமும் நகை வாங்கியதன் காரணமாக தகுதி பெற்றுள்ளார்.
தங்கச் சங்கிலியை வாங்கியதன் காரணமாக லக்கி ட்ராவிற்கு தகுதி பெற்ற பாலசுப்பிரமணியன் சிதம்பரம், முதல் பரிசான ரூ.8 கோடியை தட்டிச் சென்றார். இது குறித்த செய்தி கடை தரப்பிலிருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. செய்தி கிடைத்ததும் வீடியோ அழைப்பில் கண்ணீருடன் பேசிய சிதம்பரம், ஒருவேளை இந்த செய்தி பொய்யாக இருக்குமோ என்று பேசத் தொடங்கினார்.
அதன் பிறகு உண்மைதான் என்பதை தெரிந்த அவர், "இன்று என் தந்தையின் நான்காவது நினைவு தினம், இன்றைய தினம் இப்படி ஒரு செய்தி கிடைத்திருப்பது உண்மையிலேயே வரம். வெகு விரைவில் இந்த செய்தியை என் தாயுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதோடு சிங்கப்பூரில் பணி புரிந்ததற்கான நன்றிய உணர்வின் காரணமாக எனது வெற்றியை சமூகத்திற்கு நன்கொடையாக வழங்க இருக்கிறேன்", என்று கண்ணீர் மல்க கூறினார்.
அதிர்ஷ்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் யார் கதவை வேண்டுமானாலும் தட்டும் என்பதற்கு பாலசுப்ரமணியன் சிதம்பரத்தின் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நகை வாங்கும்போது தனக்கு இப்படி ஒரு பரிசு கிடைக்க இருக்கிறது என்பது குறித்து தெரியாமல் சாதாரணமாக தனது பெயரை சேர்த்த பாலசுப்பிரமணியன் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications