பிரிட்டன் நாட்டின் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், தற்போது பிரிட்டன் பிரதமருமான போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் பணிகள் இங்கிலாந்தில் துவங்கியுள்ளது.
அலுவலகத்தில் மது அருந்துதல், லாக்டவுன் நேரத்தில் சரக்கு பார்ட்டி, சக அமைச்சர்கள் பெரும் தவறு செய்தும் நடவடிக்கை எடுக்காதது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்படப் பல அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் அடுத்த இங்கிலாந்து பிரதமருக்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும், இன்போசிஸ் நாராணயமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பங்குபெறுவார் என்று நம்பப்படுகிறது.
இதுமட்டும் நடந்தால், இங்கிலாந்தின் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற மாபெரும் பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார் ரிஷி சுனக்.
ரிஷி சுனக்
பிரிட்டன் அமைச்சரவையில் இருந்து முதன் முதலாக ராஜினாமா செய்தவர் ரிஷி சுனக், இவருக்குப் பின்பு அடுத்தடுத்து சுமார் 40 அமைச்சர்கள் ராஜினாமா செய்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேறு வழியில்லாமலும், எதிர்கட்சியின் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமலும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போரிஸ் ஜான்சன்
ரிஷி சுனக் இடத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஈராக் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட நாதிம் ஜஹாவி-ஐ நியமித்தார். ஆனால் போரீஸ் அவரையும் ராஜினாமா செய்ய அறிவுறுத்தியுள்ளார். பிரிட்டன் பிரதமராகும் போட்டியில் பங்கு பெற உள்ள ரிஷி சுனக் யார்..? இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?
நிதியமைச்சர் பொறுப்பு
42 வயதான ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் பார்த்து பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முக்கிய அதிகாரி, பிப்ரவரி 2020 இல் இந்திய வம்சாவளியை சேர்ந்த இவருக்கு இங்கிலாந்தின் நிதியமைச்சர் பொறுப்புக் கொடுக்கப்பட்டது.
உயரிய பதவி
இதுதான் பிரிட்டன் அரசில் ஒரு இந்தியர் வகித்த உயரிய பதவியாக உள்ளது. ஆனால் இந்த நிதியமைச்சர் பதவி தான் ரிஷி சுனக்-ன் முதல் முழு அமைச்சரவை பதவியாகும்.
வரிப் பிரச்சனை
சமீபத்தில் ரிஷி சுனக்-ன் மனைவியின் அக்ஷதா மூர்த்தித் தனது அமெரிக்கக் கிரீன் கார்டு மற்றும் பிரிட்டன் குடியுரிமை ஆகியவற்றைக் காரணம் காட்டி பிரிட்டன் வருமானத்திற்கு வரி செலுத்தாமல் இருந்தது பெரும் சர்ச்சை ஆனது.
விலைவாசி உயர்வு நேரம்
இந்தச் சம்பவம் பிரிட்டன் நாட்டின் விலைவாசி உயர்வை உச்சத்தில் இருந்த போது மக்களும், எதிர்கட்சிகளும் மிகவும் காட்டமாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அக்ஷதா மூர்த்தி வரி செலுத்துவதாக அறிவித்துப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அபராதம்
சரக்கு பார்ட்டி, அலுவலகத்தில் மது அருந்தும் நடவடிக்கைக்காகப் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் நடவடிக்கையின் வாயிலாகச் சுமார் 83 பேர் மீது 126 அபராதங்கள் விதிக்கப்பட்டது. முதல் முறையாகப் பிரிட்டன் பிரதமர் அபராதம் எதிர்கொண்டார், இதில் ரிஷி சுனக்-ம் ஒருவர்.
உதவித் தொகை மூலம் புகழ்
இருப்பினும், தொற்றுநோய் பாதிப்பின் போது பிரிட்டன் நாட்டின் வணிகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு உதவுவதற்காகப் பல பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு பெரிய தொகுப்பை உதவித் தொகையாக அறிவித்த நாளில் இருந்து பெரும் புகழை அந்நாட்டு மக்களிடம் பெற்றார்.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயணமூர்த்தி-யின் மகள் தான் அக்ஷதா மூர்த்தி. ரிஷி சுனக்கிற்கும், அக்ஷதா மூர்த்தி-க்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது சந்தித்துக் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்துகொண்டனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications