இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோரும் ஹப்ஸ்பாட் இணை நிறுவனருமான தர்மேஷ் ஷா, சமீபத்தில் chat.com என்ற டொமைன் பெயரை OpenAI-க்கு $15 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளார். இந்திய மதிப்புக்கு தொராயாமக ரூ.130 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரீமியம் URL-இன் விற்பனை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய தொகைக்கு டொமைன் பெயரை விற்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. OpenAI நிறுவனத்தின் CEO-வான சாம் ஆல்ட்மேன், chat.com என்ற டொமைன் இப்போது நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்பான ChatGPT-க்கு பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹப்ஸ்பாட்டின் சிடிஓ-வாக பரவலாக பேசப்பட்ட தர்மேஷ் ஷா 2023-ஆம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்தில் $15.5 மில்லியனுக்குச் chat.com என்ற டொமைனை வாங்கினார். இந்நிலையில் இறுதி விற்பனைக்கான விலையை வெளியிடாமல் வைத்திருந்த தர்மேஷ் ஷா தற்போது டொமைனை விரைவாக மறு விற்பனை செய்து வாங்கிய விலையை விட அதிக லாபம் பார்த்துள்ளார்.

தர்மேஷ் ஷா தான் வாங்கிய டொமைன் விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக டொமைனை பதிவு செய்து பிறகு, மறு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

தர்மேஷ் ஷா தனது லிங்க்டின் பதிவில் எதற்காக chat.com டொமைனை வாங்கினார் என்பதை விளக்கி இருக்கிறார். சாட் அடிப்படையிலான சாஃப்ட்வேர்களில் அடுத்து வரும் பெரிய விஷயமாக Chat UX இருக்கும் என்று நம்பினேன். கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர்களுடன் நேச்சுரல் லாங்குவேஜ் மூலம் தொடர்பு கொள்வது மிகவும் எளிதாக உள்ளது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துக்கு நன்றி என்றும், chat.com என்ற டொமைன் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையிலும் இருப்பதால் நம்பி வாங்கியதாக பதிவிட்டிருந்தர்.
இந்த டொமைன் விற்பனை தொடர்ந்து OpenAI எப்படி பணம் செலுத்தும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இது குறித்து தனது பதிவில் தர்மேஷ் ஷா பணமாகவோ அல்லது பங்குகள் மூலமாகவோ தனக்கு வர வேண்டிய தொகை செலுத்தப்படலாம் என்று கூறி இருக்கிறார். OpenAI நிறுவனத்தின் CEO-வான சாம் ஆல்ட்மேனை 10 வருடங்களுக்கு மேலாக தனக்கு தெரியும் என்றும், அவர்கள் இருவரும் நண்பர்கள் என்றும், இதனால் லாபம் ஈட்டுவதை நான் விரும்பவில்லை என்றும், OpenAI-இன் பங்குகளை வாங்கிக் கொள்ள விரும்புவதாகவும் தனது X பதிவில் தர்மேஷ் ஷா குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications