அமெரிக்காவுல லாரி ஓட்டுனா 2 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கலாமா? டிரெண்டிங் வீடியோ..!

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நபர் அமெரிக்காவில் லாரி ஓட்டி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கி இருப்பது தான் சமூக வலைதளங்களில் தற்போது தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது. அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் சென்று வேலை செய்ய வேண்டும் என்பதை தாண்டி அங்கே செட்டிலாக வேண்டும் அங்கே சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் வீட்டின் விலை உயர்வு மற்றும் கடன்களுக்கான வட்டி அதிகம் அதிகம என்பன உள்ளிட்ட காரணங்களால் அந்த கனவை அடைவது பலருக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.

அமெரிக்காவுல லாரி ஓட்டுனா 2 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கலாமா? டிரெண்டிங் வீடியோ..!

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு லாரி ஓட்டுநர் அமெரிக்காவில் 2 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியிருப்பது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக இருக்கிறது. AvgIndianObserver என்பவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க லாரி ஓட்டுநரின் வாழ்க்கையை பகிர்ந்துள்ளார்.

"இவர் ஒரு லாரி ஓட்டுநர் , புதிதாக தான் வாங்கிய வீட்டிற்கு முன்னாடி நிற்கிறார். இது இந்திய ரூபாயில் 2 கோடி மதிப்பு கொண்டது. ஐந்து படுக்கை அறை கொண்ட இந்த வீடு ஒரு நகர்ப்புற பகுதியில் அமைந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒரு ட்ராவல் விளாக்கரால் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஒருமுறை வைரலாகி இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்த வீட்டில் அவர் தனக்கு சொந்தமாக ஜீப் காம்பேஸ் மாடல் காரையும் வைத்திருக்கிறார் என்பதுதான் மற்றொரு ஆச்சரியம்.

இந்த வீடியோவை பகிர்ந்து உள்ள AvgIndianObserver என்ற எக்ஸ் தளப் பயனர் "அமெரிக்காவில் லாரி ஓட்டுனராக இருக்கக்கூடிய நபர் தன்னுடைய வீட்டில் சொந்தமாக ஒரு ஜீப் காம்பேஸ் காரை வைத்துள்ளார். சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கி இருக்கிறார்.

ஆனால் இந்தியாவில் ஐஐடி போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் கல்வி படித்து , காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வேலை பார்ப்பவர்களால் டெல்லியின் நொய்டா பகுதியில் மூன்று படுக்கை அறை கொண்ட வீட்டினை கூட வாங்க முடியாத சுழல் நிலவுகிறது. இந்தியாவில் வாழ்வது மிக எளியது என இத்தனை நாட்களாக நம்மிடம் கூறி வளர்க்கப்பட்டது எல்லாம் பொய்" என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை அவர் பகிர்ந்ததை அடுத்து எக்ஸ் தள பக்கத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. ஒரு சிலர் இரு நாடுகளுக்கும் இடையிலான சம்பளங்களை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என பதிவு செய்துள்ளனர். ஒரு பயனர் இந்தியாவை விட வெளிநாடுகளில் வீடு வாங்குவது தற்போது எளிதாகிவிட்டது , ஆனால் அமெரிக்காவில் லாரி ஓட்டுனர்களுக்கான சம்பளம் மிக அதிகம் என்பதை நாம் இந்த இடத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மற்றொரு நபரோ அமெரிக்காவில் கட்டப்படுவது எல்லாமே மரத்தாலான வீடுகள் நம்மை போல செங்கற்களோ அல்லது கான்கிரீட்களோ கொண்டு கட்டப்படுவதில்லை. இந்த மரத்தாலான வீடுகளை நான்கு முதல் ஐந்து மாதங்களிலேயே கட்டி முடித்திடலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை நிலத்தின் மதிப்பு என்பது ஒரு சதுர அடிக்கு 83 ரூபாய் தான். அமெரிக்காவில் அதிக நிலப்பரப்பு இருக்கிறது குறைவான மக்கள் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+