அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான போட்டி சூடுபிடித்துள்ள வேளையில், மீண்டும் ரிபப்ளிகன் கட்சி ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக இருக்கும் காரணத்தால், அடுத்தத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சிகளான ரிபப்ளிகன் மற்றும் டெமாக்ரட்டிக் கட்சி அதிபர் தேர்தலில் போட்டியிடச் சிறந்த வேட்பாளரை தேர்லுக்குச் செய்வதற்கான பணிகளுக்குத் துவங்கியுள்ளது. இதனால் அதிபர் வேட்பாளர் இடத்திற்குப் போட்டியைப் பலர் போட்டிப்போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க முதலீட்டாளர் பில் அக்மேன், "இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, போட்யூஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெறுவார்!" என்று தைரியமான மற்றும் முன்கூட்டியே அறிவித்துப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
யார் இந்த விவேக் ராமசாமி..?
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், இப்போதே அதற்கான அதகளம் துவங்கியுள்ளது. அமெரிக்காவின் பிரதான அரசியல் கட்சிகளான ரிபப்ளிகன் மற்றும் டெமாக்ரட்டிக் இரண்டும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதற்காக அனைத்து பிரிவுகளை இணைக்கும் முக்கியமான நபரை தான் அதிபர் வேட்பாளராக அறிவிக்கும்.
டெமாக்ரட்டிக் கட்சி
இந்த வகையில் டெமாக்ரட்டிக் சார்பாக மீண்டும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரீஸ் கூட்டணி மீண்டும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. சொல்லப்போனால் ஜோ பைடன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை அவ்வளவு தான்.
ரிபப்ளிகன் கட்சி
இநே நிலையில் எதிர் கட்சியான ரிபப்ளிகன் சார்பாக ஏற்கனவே டொனால்டு டிரம் போட்டிப்போட உள்ளதாக அவரே அறிவித்த நிலையில், இவருக்குப் போட்டியாக ரிபப்ளிகன் சார்பாகக் கேரளா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி அதிபர் வேட்பாளர் இடத்திற்குப் போட்டிப்போடுவார் என அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
பில் அக்மேன்
இந்த நிலையில் தான் அமெரிக்க முதலீட்டாளர் பில் அக்மேன், "இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, POTUS வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெறுவார்!" என்று தைரியமான மற்றும் முன்கூட்டியே அறிவித்துப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
விவேக் ராமசாமி சரியான வேட்பாளர்
"இந்தச் செய்திக்கு நாடு தயாராக உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர் இளமையானவர், புத்திசாலி மற்றும் திறமையானவர், மேலும் ரிபப்ளிகன் கட்சியின் வெற்றிக்கான மையமாக இருப்பார். அவர் கடினமான உண்மைகளைப் பேசுகிறார், இதனால் இதை வெளிப்படையாகச் சொல்ல பலர் பயப்படுகிறார்" என்று அக்மேன், விவேக் ராமசாமி பேசும் ஒரு வீடியோவைப் ட்வீட் பகிர்ந்து இதைக் கூறியுள்ளார்.
பல துறை வல்லுனர்
அவர் வணிகம், பொருளாதாரம், சுகாதாரம், அரசியல், வரலாறு மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் திறமையான மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவார்.
நேர்மை, புத்திசாலித்தனம், ஒழுக்கம்
நீங்கள் அவருடைய எல்லாக் கருத்துக்களுடன் உடன்பட மாட்டீர்கள், ஆனால் அவருடைய நேர்மை, புத்திசாலித்தனம், ஒழுக்கம் மற்றும் ஆற்றலை நீங்கள் மதிப்பீர்கள் என்று பில் அக்மேன் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
கிளிண்டன், ஒபாமா உடன் ஒப்பீடு
அசாத்தியமான வேட்பாளராக விவேக் ராமசாமி இருப்பார், வெற்றி பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது எனப் பில் அக்மேன் உறுதிப்படக் கூறினார். மேலும் அவர் கிளிண்டன், ஒபாமா மற்றும் ட்ரம்ப்பை நினைத்துப் பாருங்கள். தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலானவர்கள் அவர்களைக் கண்டு சிரித்தனர் என்று அவர் கூறினார்.
37 வயதான விவேக் ராமசாமி
இந்திய - அமெரிக்கக் குடியரசுக் கட்சி சார்பாக 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் இருக்கும் விவேக் ராமசாமி பில் அக்மேனின் கருத்து முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான கோடீஸ்வரரும், இந்தியரும் அமெரிக்காவின் அதிபர் ஆனால் உலகளவில் பெரும் மாற்றத்தைப் பார்க்க முடியும்.
அமெரிக்கக் குடியுரிமை
விவேக் ராமசாமி ஆகஸ்ட் 9, 1985 ஓஹியோவின் சின்சினாட்டியில் பிறந்து வளர்ந்தார்.இவருடைய பெற்றோர்கள் இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள். அவரது தந்தை வி.ஜி. ராமசாமி, கேரளாவில் உள்ள ஒரு பிராந்திய பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார், பின்னர் ஓஹியோவின் ஈவென்டேலில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் ஆலையில் பணிபுரிந்தார். அவரது தாயார் கீதா, சின்சினாட்டியில் முதியோர் மனநல மருத்துவராக இருந்தார்.
விவேக் ராமசாமி பிஸ்னஸ்
விவேக் ராமசாமி அமெரிக்கத் தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். 2022 இல், அவர் ஸ்டிரைவ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை இணைந்து நிறுவினார் மற்றும் தற்போது செயல் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஸ்டிரைவுக்கு முன், அவர் உயிரி மருந்து நிறுவனமான Roivant Sciences ஐ நிறுவியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல புத்தகத்தை எழுதியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications