எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னிலை வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தில், சமீபத்திய பணி நீக்க நடவடிக்கைகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எலான் மஸ்க் மார்கெட்டிங், டெக், விற்பனை என பல பிரிவில் இருந்து ஊழியர்களை கண்மூடித்தனமாக பணிநீக்கம் செய்தார்.
எலான் மஸ்க்-ன் இந்த மோசமான நடவடிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக லிங்கிடுஇன் தளத்தில் பதிவிட்டுள்ள அந்தப் பொறியாளர், தான் பணியாற்றிய குழுவில் 75 சதவீதமானோர் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய இந்த பெண், செய்த லின்கிடுஇன் பதிவில் "நேற்று டெஸ்லா குடும்பத்தில் எனக்கு ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையால் எங்கள் குழுவில் இருந்த 75 சதவீதமானோர் வெளியேற்றப்பட்டனர். இதில் நானும் அதில் அடக்கம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இவர் இந்த குறுகிய காலத்தில் டெஸ்லாவில் தனது பணி அனுபவம், தனது பங்களிப்பு, பொறுப்புகள் பற்றிய விவரங்களையும் இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மாஸ் லேஃஆப்-ல் பாதிக்கப்பட்டாலும், டெஸ்லா போன்ற முக்கியமான நிறுவனத்தின் இண்டர்வியூவில் தேர்வாவது பெரும் சவாலான விஷயம்.
டெஸ்லா மிகவும் சவால் நிறைந்த சூழல், இந்த நிறுவனத்தில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், வலுவான ப்ரொபஷனல் கனெக்ஷன் வளர்த்துக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பிற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்காக லிங்க்டின் வலைத்தளத்தில் தனது நெட்வொர்க்கிடம் உதவி கேட்டும் அவர் பதிவிட்டுள்ளார்.
விற்பனை வீழ்ச்சியும், போட்டி அதிகரிப்பும் காரணமாக டெஸ்லாநிறுவனத்தில் மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சமீபத்தில் சுமார் 500 சார்ஜர் பிரிவு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மூத்த நிர்வாகிகளான ரெபேக்கா டினுச்சி மற்றும் டேனியல் ஹோ ஆகியோரையும் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக தி இன்ஃபர்மேஷன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications