பணக்கார இந்தியப் பெற்றோர்களில் 78 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற கனவோடு உள்ளனர். ஆனால் பலர் அதற்கு நிதி ரீதியாகத் தயாராக இல்லை என்று HSBC அறிக்கை தெரிவிக்கிறது. இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் ஓய்வு சேமிப்பை கூட இதற்காக தியாகம் செய்ய தயாராக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
2025-ஆம் ஆண்டிற்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் படிப்பைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெற்றோருக்கு நிதித் தேவையே முதன்மையான கவலையாக இருக்கிறது. மூன்று அல்லது நான்கு வருட பட்டப்படிப்புக்கான சர்வதேசப் பள்ளிக் கல்விக்கான செலவு US, UK ஆகிய இடங்களில் அதிகரித்துள்ளது. எனவே இந்தியப் பெற்றோர்கள் ஓய்வூதியச் சேமிப்பில் 64 சதவிகிதம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என 1,456 இந்தியப் பணக்காரர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பணக்கார பெற்றோர்களில் 53% பேர் மட்டுமே தங்கள் குழந்தைகளின் வெளிநாட்டு கல்விக்கு நிதியளிக்க சேமிப்பு திட்டத்தை வைத்துள்ளனர். 40% பேர் தங்கள் குழந்தை கல்விக் கடன் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் 51% பேர் அவர்கள் உதவித்தொகை பெறுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் (27%) தங்கள் குழந்தையின் கல்விக்காக தங்கள் சொத்துக்களை விற்பதைக் கூட கருத்தில் கொள்வார்கள் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
தேவையான நிதி உதவியை பெறுவதற்கு மேலாக தங்கள் பிள்ளைகள் சரியான படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மன அழுத்தத்திற்கும் இந்திய பெற்றோர்கள் ஆளாவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் வெளிநாட்டுக் கல்விச் செலவைத் தவிர, நிதி இலக்குகள், உடல்நலம் தொடர்பான அபாயங்கள், அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் மற்றும் உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளின் தாக்கம் ஆகியவற்றைப் பற்றிய தனிநபர்களின் பார்வையையும் ஆய்வு மதிப்பீடு செய்தது.
உலகளவில், வசதியான தனிநபர்களின் முதல் ஐந்து கவலைகள் வாழ்க்கைச் செலவு உயர்வு, அதிக பணவீக்கம், உடல் நலப் பிரச்சினைகள், அதிக சுகாதாரச் செலவுகள் மற்றும் வசதியான ஓய்வுக்கு போதுமான அளவு சேமிக்க இயலாமை.
பணக்கார இந்தியர்கள் தங்கள் நிதி நிலைமை நன்றாக உள்ளதாக நம்புகின்றனர். 60-சதவிதத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் மொத்த முதலீடுகளில் அதிகரிப்பைக் கண்டுள்ளனர். அதேசமயம் 36% பேர் பெரிய மாற்றத்தைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications