இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், வர்த்தக முறையில் முக்கியமான மாற்றங்கள் அவசியமாகியுள்ளது. அப்படி இந்தியாவில் சமீபத்தில் 24 மணி நேர வர்த்தக செய்யும் முறை மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் இரவு நேர வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஹரியானா மற்றும் டெல்லி உட்பட ஏழு மாநிலங்களின் தலைநகரில் மட்டும் கடைகளையும் நிறுவனங்களையும் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

இது, பாரம்பரியமான காலை 6 முதல் இரவு 10-11 மணி வரையிலான வர்த்தக நேரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுப்பட்ட வர்த்தக முறையாகும். இந்த மாற்றம், இரவு நேரங்களில் வர்த்தகம் மற்றும் நிதி பரிமாற்றத்தை அதிகரித்து புதிய வர்த்தக சந்தை உருவாகியுள்ளது.
சிம்ப்ள் (Simpl) நிறுவனத்தின் "செக்அவுட் ஸ்கேன்" தரவுகளின்படி, கடந்த ஒரு வருடத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வைக்கப்பட்ட ஆர்டர்களுக்கான செலுத்தும் தொகை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
குவிக்-காமர்ஸ், உணவு மற்றும் குளிர்பானங்கள், போக்குவரத்து மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வியாபாரிகளிடம் பெறப்பட்ட தரவுகள் படி உருவாக்கியுள்ளது சிம்பிள்.
சிம்ப்ளின் நிறுவனத்தின் "ஒன்-டேப் செக்அவுட்" மற்றும் "பே-இன்-3" போன்ற செக்அவுட் சேவைகளை பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நுகர்வோர் மேலே கூறிய சேவைகளுக்கு பணத்தை செலுத்தியுள்ளனர். Simpl என்பது பல பிரபலமான நிறுவனங்களின் முக்கிய பேமெண்ட் கேட்வே ஆக செயல்பட்டு வருகிறது.
இரவு நேர விருந்துகள், வார இறுதி நாட்களின் கொண்டாட்டம் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவை இரவு நேர நுகர்வோர் செலவு செய்வதை அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த கலாச்சார மாற்றங்கள், இரவு நேர நுகர்வோரை இந்திய வர்த்தக சந்தைக்கு முக்கியமானதாக மாற்றியுள்ளது.
இரவு நேரங்களில் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது, இந்த வெற்றியை தொடர்ந்து 24 மணிநேர வர்த்தக முறையை 7 மாநிலங்களை தாண்டி பிற மாநிலங்களும் நடைமுறைப்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் ஆன்லைனில் சேவைகளைப் பெறுவதில் நுகர்வோருக்கு மிகவும் வசதியாக உள்ளதாக இந்த தரவுகள் காட்டுகிறது.
இந்த 24 மணிநேர வர்த்தக சேவைக்கு ஏற்ப, Zepto, Blinkit, Swiggy Instamart (குவிக்-காமர்ஸ்), Zomato, Swiggy (உணவு மற்றும் பானங்கள்), Myntra மற்றும் Nykaa (ஃபேஷன்) போன்ற முன்னணி நிறுவனங்கள் தனது வர்த்தக முறையை மாற்றி கூடுதல் லாபம் ஈட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications