ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்போது வல்லரசு ஆகும் என்றால் அந்த நாட்டு மக்களின் தனிநபர் வருமானத்தை பொறுத்து தீர்மானிக்கப்படும். அந்த வகையில் இந்தியா எப்போது வல்லரசு ஆகும் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது மட்டும் அல்லாமல் இந்திய மக்களின் வருமானம் 7 மடங்கு உயரபோகுது என்ற குட்நியூஸ்-ம் கிடைத்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் இந்திய மக்களின் தனிநபர் வருமானம் 2 லட்சம் ரூபாயாக உள்ளது, இது அமெரிக்க டாலரில் கணக்கிட்டால் 2500 டாலர். இந்த நிலையில் எஸ்பிஐ சமீபத்தில் வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கையில் இந்திய மக்களின் தனி நபர் வருமானம் 2047 ஆம் நிதியாண்டில் சுமார் 7.5 மடங்கு உயர்ந்து 14.9 லட்சம் ரூபாயாக அதாவது 12, 400 டாலராக உயர்வும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடி 77வது சுதந்திர தின விழாவில் பேசிய போது இந்தியா 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உயரும் என தெரிவித்தார். 100வது சுதந்திர தின விழாவில் இந்திய வல்லரசு நாடாக இருக்கும் எனவும், இந்தியாவின் வளர்ச்சியின் வேகம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது.
மேலும் அடுத்த 5 வருடம் இந்தியாவிற்கு பொற்காலமாக உள்ளது, இக்காலக்கட்டத்தில் கைப்பற்றும் வர்த்தகம், வாய்ப்புகள் அனைத்தும் 2047ல் வல்லரசாகும் நிலைக்கு உயர்த்தும். ஒரு நாடு வளர்ந்த நாடாக உயர என்ன அளவுகோள்..?
உலகளவில் கடைப்பிடிக்கப்படும் அளவுகோள் படி ஒரு நாட்டின் தனி நபர் வருமானம் வருடாந்திர அளவில் 1000 டாலருக்கு கீழ் இருந்தால் அது ஏழை நாடு. இதுவே ஒரு நாட்டு மக்களின் சராசரி வருமானம் 1000 முதல் 12000 டாலர் வரையில் இருந்தால் Middle - Income நாடுகள் அல்லது வளரும் நாடுகள். இதுவே 12000 டாலருக்கு அதிகமான per capita income கொண்ட நாடுகள் எனில் அது வல்லரசு நாடுகள் என உலக வங்கி நிர்ணயம் செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் ஆய்வறிக்கையின் படி 2047 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1,610 மில்லியனாக இருக்கும், 2023 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 1400 மில்லியன். இதன் படி வருமான வரிக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை தற்போது இருக்கும் 313 மில்லியனில் இருந்து 565 மில்லியனாக உயரும் என கணித்துள்ளது.
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வை வேலைவாய்ப்பு சந்தைக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை உயர்வை காட்டுகிறது. மேலும் 2027 ஆம் நிதியாண்டில் இந்தியா உலகின் 3வத பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications