இந்திய ரயில்வே துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது, பயணிகள் சேவை துறையில் வந்தே பாரத் ரயில் வாயிலாகவும், சரக்கு ரயில் சேவை பிரிவில் நாட்டின் முக்கிய இடங்கள் இணைக்கப்பட்டு வரும் வேளையில் ரயில் போக்குவரத்து இந்திய மக்களுக்கும், தொழிற்துறைக்கும் மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது.
இதேவேளையில் 100 வருடமாக பெரிய அளவிலான அதிரடி மாற்றங்கள் இல்லாமல் இயங்கி வரும் ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக வருமானத்தை அதிகரிக்க பல நடவடிக்களை எடுத்து வருகிறது. இதில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவது முதல் டிக்கெட் வாங்காமல் இருப்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது வரையில் அடங்கும்.

இந்த நிலையில் இந்திய ரயில்வே துறை அதிகாரிகள் டிக்கெட் இல்லாமலும், தவறான டிக்கெட் உடன் பயணித்த சுமார் 3.6 கோடி பேரை 2022-23 ஆம் ஆண்டில் பிடித்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 2.7 கோடியாகவும், 2019-20ல் 1.10 கோடியாக இருந்தது. கொரோனா பாதித்த 2020-21 ஆம் நிதியாண்டில் 32.56 லட்சமாக இருந்தது.
டிக்கெட் இல்லாமலும், தவறான டிக்கெட் உடன் பயணித்த பயணிகள் மூலம் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை 2020-21 ல் வெறும் 152 கோடி ரூபாயாக இருந்தது. இது 2021-22 ஆம் நிதியாண்டில் 2260.05 கோடி ரூபாயாகவும், 2022-23 ஆம் நிதியாண்டில் 2260.05 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது என RTI மூலம் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு தகவலை வெளியிட்டு உள்ளது.

இதன் மூலம் கடந்த ஆண்டு அதாவது ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 3.6 கோடி பயணிகளிடம் இருந்து மத்திய ரயில்வே துறை 2,260.05 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 3.6 கோடி பேர் எனில் இது உலகின் பல நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு இணையான எண்ணிக்கையாகும்.
மத்திய ரயில்வே துறை டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் நபரிடம் டிக்கெட் கட்டணக்தையும் சேர்த்து குறைந்தபட்சம் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதை செலுத்தாதவர்கள் ரயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். ரயில்வே போலீஸ் இவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் 1000 ரூபாய் வரையில் அபராதம் அல்லது 6 மாத ஜெயில் தண்டனை அளிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications