ரயில் பயணங்களின் போது பயணிகளுக்கு பெரிய சிரமம் என்றால் அது சாப்பாட்டுப் பிரச்னை தான். அதிலும் தரமான சாப்பாடு என்பது மிகவும் சிரமான விஷயம். பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்கு ஏற்றபடி பிளாட்பாரங்களில் மலிவு விலையில் உணவுகள் விற்கப்பட்டாலும் மக்களின் தேவையை முழுமையாக இந்திய ரயில்வேயால் தீர்த்து வைக்க முடியவில்லை.
இந்த நிலையில் புதிய சூப்பர் சஸ்தா எனும் உணவு சேவையை இந்திய ரயில்வே பயணிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் கீழ் ரூ.20க்கு பூரி மசால் கிடைக்கும். ரூ.50க்கு ஃபுல் தாளி மீல்ஸ் கிடைக்கும்.

இதற்காக முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்களில் 150 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த வழியாகப் பயணிப்போர் அனைவருக்கும் உணவு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறிய நகரங்களில் ரயில்கள் ஒருசில நிமிடங்கள் நிற்கும்போது பயணிகள் உணவு வாங்குவதற்கு மிகவும் அல்லல் படுகின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக இந்த சூப்பர் சஸ்தா சேவையை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்துகிறது.
குறிப்பாக பொதுப்பெட்டிகளில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு போதுமான அளவு குடிநீர், உணவு போன்ற வசதிகள் தேவைக்கு ஏற்ப கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
உணவு தவிர பசியை அப்போதைக்குப் போக்கும் ஸ்நாக்ஸ்களையும் விற்பதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் பயணத்தை மக்கள் ஒரு சுகமான அனுபவமாக உணர வேண்டும் என்பதே இந்திய ரயில்வேயின் நோக்கமாக இருக்கிறது.
ஏற்கனவெ ரயில்வே பிளாட்பாரங்களில் ஸ்நாக்ஸ் ஸ்டால்கள், விஎல்ஆர் எனும் சைவ சிற்றுண்டி கவுன்டர்கள் உள்ளன. அத்துடன் ிந்த சூப்பர் சஸ்தா கவுன்டர்களும் கூடுதல் வசதியை பயணிகளுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இ்நதிய ரயில்வேயின் இந்த சூப்பர் சஸ்தா திட்டத்துக்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிளாட்பாரங்களில் உள்ள உணவகங்கள், விஎல்ஆர் கவுன்டர்கள் போக பெரும்பாலான நீண்ட தூர ரயில்களில் பான்ட்ரி கார்கள் உள்ளன. இது ஒரு நடமாடும் கேன்டீன் ஆகும். அதிலும் உணவுகள் தயாரிக்கப்பட்டு ஓடும் ரயிலில் பயணிகளுக்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications