இந்தியன் ரயில்வே தினமும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு சேவை அளித்து வருகிறது. பயணிகளுக்கு வசதியான ரயில் பயணத்தை வழங்க ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, நாட்டிலேயே முதல் முறையாக ஓடும் ரயிலில் ஏடிஎம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரயில் இயக்கத்தில் இருக்கும்போது, பயணிகள் ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏடிஎம் ஏந்திரத்தில் பயணிகள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ரயில்வே இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில், கடந்த தினங்களுக்கு முன் நாசிக்கில் உள்ள மன்மாட் மற்றும் மும்பை இடையே இயங்கும் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் ஏடிஎம் எந்திரத்தை நிறுவி சோதனை ஓட்டத்தை நடத்தியது. சோதனையின்போது, ரயில் இயக்கத்தில் இருக்கும்போது பயணிகள் ஏடிஎம் எந்திரத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் பணத்தை எடுத்தனர். இதனையடுத்து ஓடும் ரயிலில் ஏடிஎம் சேவை சோதனை வெற்றியடைந்தது.

சோதனை ஓட்டம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இகத்புரி மற்றும் கசாரா இடையே குறுகிய கால நெட்வொர்க் இழப்பை தவிர்த்து, சோதனை சீராக நடந்தது. சுரங்கப்பாதைகள் மற்றும் குறைந்த மொபைல் கவரேஜ் காரணமாக மோசமான சிக்னலுக்கு அந்த பகுதி பெயர் பெற்றது என்று தெரிவித்தனர்.
பூசாவலின் கோட்ட ரயில்வே மேலாளர் இட்டி பாண்டே கூறுகையில், பூசாவல் பிரிவு ஏற்பாடு செய்த ஐஎன்எஃப்ஆர்ஐஎஸ் கூட்டத்தின்போது, ரயில்களில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதித்தோம்.
ரயில்வேயின் பூசாவல் பிரிவு மற்றும் மகாராஷ்டிரா வங்கியின் கூட்டாண்மை மூலம் புதுமையான மற்றும் கட்டணம் அல்லாத வருவாய் ஐடியா திட்டத்தின் கீழ் இந்த ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரயிலின் ஏசி பெட்டியில் இந்த ஏடிஎம் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ரயிலின் 22 பெட்டிகளும் வெஸ்டிபுல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், ரயிலில் உள்ள அனைத்து பயணிகளும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாதுகாப்பிற்காக, ஏடிஎம் ஒரு ஷட்டர் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்புடன் மேற்பார்வை செய்யப்படுகிறது. இப்போது மக்கள் ஓடும் ரயிலில் பணம் எடுக்க முடியும். ஏந்திரத்தின் செயல் திறனை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்று தெரிவித்தார்.
ரயில் ஏடிஎம் சேவை பிரபலமடைந்தால் மேலும் பல ரயில்களுக்கு விரிவுப்படுத்தப்படலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து ரயில்களிலும் ஏடிஎம் சேவை வந்துவிட்டால் இனி புதிய இடங்களுக்கு செல்லும்போது, ஏடிஎம் எங்கு உள்ளது என்று தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications