மேற்கு வங்கள ரயில் விபத்தை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்த பின்னர் இந்திய ரயில்வே 100 நாள் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் வசதியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கேன்சல் செய்த 24 மணிநேரத்துக்குள் பணத்தை திரும்பத் தருதல், லைவ் மெகா ஆப், பயணிகளுக்கான சேவைகள் இதில் அடங்கும்.
100 நாள் திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணம் இப்போது 3 நாட்கள் கழித்து திரும்பத் தரப்படுகிறது. இதை ஒரே நாளில் தருவதற்கான வேலையை ரயில்வே செய்கிறது.

அமிர்த பாரத் ரயில்களை அதிகரித்தல், மெகா ஆப் மூலம் லைவ்வாக சர்வீஸ் அப்டேட்கள், டிக்கெட்டிங், ரீபண்டுகள், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்குதல் ஆகியவை 100 நாள் திட்டத்தில் அடங்கும். புகார்கள் பற்றி அக்கறையாக விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி நுழைவோரை தடுத்தல், ரயில்வே மேம்பாலங்கள் அமைத்தல், சப்வேக்களை அகலப்படுத்துதல், பயணிகள் சேவைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குதல் செய்யப்படும்.
அண்மைக்காலமாக பயணிகள் சேவை தொடர்பாக நிறைய அழுத்தம் வந்துள்ளது. நேரத்துக்கு ரயில்களை இயக்குதல், தண்ணீர் தேவையை தீர்ப்பது, கேட்டரிங், சுத்தமாக வைத்தல், வெயி்ட்டிங் லிஸ்ட்டை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நடைமேம்பாலம் ஆய்வுகளின் போது காணப்பட்ட குறைபாடுகளை விரைவில் சரி செய்ய வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சுரங்கப்பாதைகளை ஆய்வு செய்து, மழைக்காலத்துக்கு முன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என உறுப்பினர் உள்கட்டமைப்பு அனில் குமார் கண்டேல்வால் கூறினார்.
ஒட்டுமொத்த பயணிகளின் அனுபவம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து உறுப்பினர் செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு குறித்து பேசிய சீமா கபூர், ஒட்டுமொத்த பயணிகளின் தேவை 2030 ஆம் ஆண்டளவில் 10 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பயணிகள் முனையங்கள் திட்டமிடப்பட வேண்டும். அனைத்து நிலையங்களிலும் அனைத்து வசதிகளையும் திட்டவட்டமாக காட்டும் முக்கிய இடங்களில் நிலைய வசதி வரைபடங்கள் இருக்க வேண்டும்.
100 சதவீத டிஜிட்டல் கட்டணங்களை அனைத்து மண்டல ரயில்வேகளும் இலக்காகக் கொள்ள வேண்டும். அவை முன்னுரிமையில் கவனிக்கப்பட வேண்டும். ஐஆர் மூலம் பெரிய அளவிலான டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்வதன் மூலம், சைபர் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் இணைய நெருக்கடி மேலாண்மை திட்டங்களின் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய ரயில்வேயின் 'விக்சித் பாரத் 2047’ நிகழ்ச்சி நிரலும் சமர்ப்பிக்கப்பட்டது. பயணிகள் சேவைகள், உலகத் தரம் வாய்ந்த ரயில்கள், நிலையங்கள் மற்றும் சரக்கு சேவைகளில் முன்னேற்றம், உள்கட்டமைப்பு பெருக்கத்துக்கான ஒரு நடைபாதை அணுகுமுறை (கிளஸ்டர்களை உருவாக்க குறிப்பிட்ட இடங்களில் உள்கட்டமைப்பு முதலீடுகளை ஒருமுகப்படுத்துதல் மற்றும் இணைத்தல்) ஆகியவை விவாதிக்கப்பட்ட முக்கிய கருப்பொருள்கள்.
story written by: Jayachandran


Click it and Unblock the Notifications