இந்தியன் ரயில்வே அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது இஸ்ரோ நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே கைகோர்த்து இருப்பதால் ரயில் பயணிகளுக்கு புதிய வசதி கிடைத்துள்ளது.
இஸ்ரோவுடன் இந்தியன் ரயில்வே கைகோர்த்த நிலையில் ரயில்களின் புறப்பாடு மற்றும் சேரும் நேரம் ஆகியவைகளை இனி துல்லியமாக பயணிகள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவுடன் இந்தியன் ரயில்வே
இந்திய ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிகழ்நேர ரயில் தகவல் அமைப்பு (RTIS) என்ற தொழில்நுட்பத்தை நிறுவி இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இனி ரயில்களின் புறப்பாடு,சேரும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக பயணிகள் தெரிந்து கொள்ள முடியும்.
ரியல் டைம் ரயில் தகவல் அமைப்பு
இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ரியல் டைம் ரயில் தகவல் அமைப்பு (RTIS) என்பது, ரயில்களின் முழு தகவல்களை பெறுவதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் ரயில் நிலையங்களில் ரயில்கள் வந்து சேரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் மற்றும் ரன்-த்ரூ ஆகியவைகளை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
30 வினாடிகளில் தகவல்
கண்ட்ரோல் ஆபிஸ் அப்ளிகேஷன் (COA) என்ற தொழில்நுட்ப அமைப்பு ரயில்களின் முழு கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கும் என்றும், இது பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. பயணிகள் கேட்கும் எந்த தகவலையும் இந்த அப்ளிகேஷன் 30 வினாடிகளுக்குள் தந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு
RTIS தொழில்நுட்ப கொண்ட ரயில்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் வேகத்தை ரயில்வே அதிகாரிகளும் கண்காணிக்க முடியும். ரயில்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கான தீர்வுகளையும் அதிகாரிகளிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்ள முடியும்
இஸ்ரோ
இஸ்ரோ அமைப்புடன் கைகோர்த்த நிலையில் இதுவரை 21 மின்சார லோகோ ஷெட்களில் 2700 ரயில் இன்ஜின்களுக்கு RTIS சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இஸ்ரோவின் சாட்காம் மையத்தை பயன்படுத்தும் வசதிகளை இந்த ரயில்கள் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications