பழைய ஸ்கிராப்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.2500 கோடி வருமானம்.. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரயில்வே ஸ்கிராப் விற்பனை மூலம் 2500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியா நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் 2500 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாயினை ஈட்டியுள்ளது.

இந்த ரயில்வே-யின் இந்த வருமான அறிவிப்பானது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட 28.91% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ உடன் கைகோர்த்த இந்தியன் ரயில்வே.. எதற்காக..?இஸ்ரோ உடன் கைகோர்த்த இந்தியன் ரயில்வே.. எதற்காக..?

வருவாய் இலக்கு

வருவாய் இலக்கு

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே 2022 - 23ம் ஆண்டில் பழைய பொருட்கள் விற்பனை மூலம், 4,400 கோடி ரூபாய் வருவாயினை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழைய பொருட்கள் விற்பனை ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்படுகின்றது. இதன் மூலம் ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தொடர் செயல் முறைதான்

தொடர் செயல் முறைதான்

சேவை செய்யாத முடியாத/ஸ்கிராப் இரயில்வே பொருட்களின் விற்பனையானது ஒரு தொடர் செயல் முறை தான், இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் ஒரு வருமானத்தினை பெறுகிறது.

ரயில்வே வாரியம் பொதுவாக கட்டுமானம் மற்றும் கேஜ் கன்வெர்சன் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் செயல்படாத நிலையில், அவற்றை ஸ்கிராப் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சரக்கு ரயில் ரேக்குகள்

சரக்கு ரயில் ரேக்குகள்

ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2021 - 22ல் 3,60,732 மெட்ரிக் டன்னாக இருந்த இரும்புக் கழிவு, 2022 - 23ல் 3,93,421 , மெட்ரிக் டன்னாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று வெளியான அறிக்கை ஒன்றில், ஹிண்டால்கோ நிறுவனத்தால் இந்தியாவின் முதல் அலுமினிய சரக்கு ரயில் ரேக்குகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைத்தார்.

எடை குறைவானவை  அலுமினியம் ரேக்

எடை குறைவானவை அலுமினியம் ரேக்

அலுமினியம் ரேக்குகள் சரக்கு போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, இந்திய ரயில்வேக்கு அதிக கார்பன் சேமிப்பை ஏற்படுத்தும் என்று ஹிண்டால்கோவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேக்குகள் தற்போதுள்ள ரேக்குகளை விட 180 டன் எடை குறைவானவை. எனினும் இது 5 - 10% அதிக எடையை தாங்கிக் செல்ல கூடியவை. இதனால் எதிர்காலத்தில் ஸ்கிராப் விற்பனையும் குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian railways earned over Rs.2500 crore through scrap sale

Indian Railways reported that it has earned Rs 2500 crore from the sale of scrap.
Story first published: Monday, October 17, 2022, 21:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X