இந்திய ரயில்வே டிசம்பர் 26, 2025 முதல் புதிய கட்டண அமைப்பை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சகம் கணித்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு கட்டணம் சற்று உயர்கிறது. குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர், மாதாந்திர சீசன் டிக்கெட் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.
புதிய கட்டணம்
215 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கட்டண உயர்வு கொண்டுவரப்படுகிறது. அதாவது சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கி.மீ.க்கு 1 பைசா கூடுதல் கட்டணமும், மெயில்/எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத வகுப்புகள் மற்றும் ஏசி வகுப்புகளில் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கி.மீ.க்கு 2 பைசா கூடுதல் வசூலிக்கப்பட உள்ளது.
உதாரணமாக 500 கி.மீ. ஏசி அல்லாத பயணத்துக்கு ரூ.10 கூடுதல் செலுத்த வேண்டும். சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை. அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு.

புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்களுக்கு கட்டண உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால். இது தினசரி பயணம் செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்கள், மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏதும் இருக்காது.
மத்திய ரயில்வே துறை ஜூலை 2025இல் செய்யப்பட்ட கட்டண உயர்வு இதுவரை ரூ.700 கோடி கூடுதல் வருவாய் தந்துள்ளது. இப்போதைய மாற்றமும் அதே போல வருவாயை உயர்த்தும். ரயில்வேயின் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில் இது அவசியமாக பார்க்கப்படுகிறது.
மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகள் அதிகரிக்கும் என்பதால் 8 மண்டலங்களில் 244 சிறப்பு ரயில் பயணங்கள் இயக்கப்படும் எனவும், தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் புதிய கட்டண அமைப்பு டிசம்பர் 26 முதல் அமலாகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications