டெல்லி: இந்திய ரயில்வே சுமார் 100 வந்தே பாரத் ரயில்களுக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்து இருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வந்தே பாரத் ரயில்களின் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. பயணிகளிடையே இந்த ரயில்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே அடுத்தடுத்து புதிய பாதைகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில் சேவைகளை விரிவுபடுத்த 2023ஆம் ஆண்டு இந்திய ரயில்வே 100 வந்தே பாரத் ரயில்களுக்கான கட்டமைப்பு மற்றும் மேலாண்மை பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் பிரெஞ்சு நிறுவனமான Alstom India கலந்து கொண்டு 30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது. இதன்படி 7 ஆண்டுகளில் 100 அலுமினியத்தால் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்களை ஒப்படைப்பது மற்றும் 35 ஆண்டுகளுக்கு அவற்றின் பராமரிப்பு மேலாண்மை மேற்கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனிடையே ரயில்வே நிர்வாகம் திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. Alstom India நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான ஒலிவியர் லாய்சன் இந்த தகவலை தெரிவித்திருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பிரான்சை சேர்ந்த இந்த சர்வதேச நிறுவனம் ஒரு ரயிலுக்கு 150 .09 கோடி ரூபாயை ஒப்பந்த புள்ளியாக கோரி இருந்தது. ஆனால் இது அதிகமாக இருக்கிறது என்றும் இந்த விலையை 140 கோடி ரூபாயாக குறைக்க வேண்டும் என்றும் இந்திய ரயில்வே தரப்பில் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த நிறுவனம் 145 கோடிக்கு ஒரு ரயில் என இறுதி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் ரயில்வே நிர்வாகம் அதனை ஏற்காமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி இந்திய ரயில்வே 30,000 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியது. அப்போது ஒரு ரயிலுக்கு 150.9 கோடி என்பதை ஏற்ற ரயில்வே துறை தற்போது வேறு நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கும் பொருட்டு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் ஒப்பந்தம் கோர இருக்கிறது.
இதற்கு முன்னதாக ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிப்பு மற்றும் மேலாண்மைக்கு 120 கோடி ரூபாய் என ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறும் ரயில்வே அதிகாரிகள் விரைவில் ஒப்பந்தப்புள்ளி விவரம் வெளியிடப்படும் என கூறியுள்ளனர். கூடியவிரைவில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதுமட்டுமின்றி பல வழித்தடங்களில் இந்த ரயில் சேவை கொண்டுவரப்பட உள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications