இந்திய ரயில்வே தினசரி அடிப்படையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்குகிறது. நம்பகமான மற்றும் மலிவான போக்குவரத்தை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். வெளியூர்களில் தங்கி இருக்கும் சிலர் வீட்டிற்கு செல்வதற்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முன்னரே டிக்கெட் புக் செய்து வைப்பது வழக்கம். ஆனால் சில நேரங்களில் திட்டமிட்டபடி பயணிக்க முடியாமல் போகலாம். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டை வேறொரு பயணியின் பெயருக்கு மாற்ற முடியும்.
அப்படி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில் பெயர் மற்றும் தேதியை மாற்றும் வசதியை ரயில்வே கொண்டு வந்துள்ளது. திட்டமிட்டபடி பயணிக்க முடியாமல் போகும் நேரங்களில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு பதிலாக அதை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற முடியும். நீங்கள் முன்பதிவு செய்த தேதி அல்லாமல் வேறு தேதியில் புதிய பயணி பயணிக்க விரும்பினாலும் அந்த தேதியையும் மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் டிக்கெட் ரத்து செய்யப்படுவதனால் ஏற்படும் நிதி இழப்பைத் தடுக்கலாம்.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை குடும்ப உறுப்பினர்களான தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி ஆகியோரின் பெயருக்கு மாற்றலாம். கல்வி சுற்றுலா, அரசு அதிகாரிகளின் மூலம் செய்யப்பட்ட குழு முன்பதிவுகளின் போது குழுவிற்கு இடையில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ட்ரெயின் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் பெயர் மாற்றத்தை செய்திருக்க வேண்டும். டிக்கெட் மாற்றம் செய்யப்படுவதற்கு அசல் பயணி மற்றும் புதிய பயணியின் எழுத்துப்பூர்வ கோரிக்கை மற்றும் அடையாளச் சான்றுகள் தேவைப்படும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 2: "மை புக்கிங்ஸ்" என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். புக் செய்த எந்த டிக்கெட்-டில் பெயரை மாற்ற இருக்கிறீர்களோ? அதை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: அதன் பிறகு "சேஞ்ச் பாசஞ்சர் நேம்" அல்லது "ட்ரான்ஸ்ஃபர் டிக்கெட்" ஆகியவற்றில் ஒன்றை கிளிக் செய்ய வேண்டும். டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்யப்படும் நபரின் பெயர், வயது மற்றும் பாலின விவரங்களை கொடுக்க வேண்டும். இதற்கு தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும். டவுன்லோட் ஆப்சன் மூலம் புதிய இ-டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் டிக்கெட் தேதியை மாற்றுவது எப்படி?: டிக்கெட் முன்பதிவு செய்த தேதியை மாற்றும் ஆப்ஷனையும் இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.
ஸ்டெப் 1: IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அப்ளிகேஷனில் லாகின் விவரங்களை வழங்கி உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 1:பின்னர் "மை புக்கிங்ஸ்" என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் எந்த டிக்கெட்டுக்கு தேதியை மாற்றம் செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: "சேஞ்ச் ஜர்னி டேட்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் புதிய பயண தேதியை குறிப்பிட்டு டிக்கெட் உள்ளதா என்பதை சரி பார்த்து, அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். செயல்முறை முடிந்ததும் இ-டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஆஃப்லைனில் டிக்கெட்டில் பெயர் மற்றும் தேதியை மாற்றுவது எப்படி?: அதற்கு டிக்கெட் கவுண்டருக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதிகாரிகள் உங்கள் விவரங்களை சரிபார்த்து டிக்கெட்டை புதிய பெயருக்கு மாற்றுவார்கள்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications