இந்திய ரயில்வே அதன் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பயனுள்ள ஒரு அம்சத்தை வெளியிட்டுள்ளது. அது வேறொன்றுமில்லை "புக் நவ் பே லெட்டர்" என்ற ஆப்ஷன். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு பேமண்டை பின்னர் செலுத்தலாம். ஆனால் இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் ஆன்லைனில் தான் செய்ய முடியும். இந்தப் பதிவில் இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கும் புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
இந்தியாவில் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்து முறையை தேர்வு செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் குறைவான டிக்கெட் கட்டணங்கள் மற்றும் வசதியான இருக்கைகள். மக்களால் அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் போக்குவரத்து முறைகளில் ரயில் பயணமும் ஒன்று. இதற்கு முன்னர் வெளியூர்களுக்கு செல்ல மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உடனடியாக பணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது முன்பதிவு செய்துவிட்டு பின்னர் பேமண்டை செலுத்தும் ஆப்ஷனை இந்திய ரயில்வே வழங்கி இருக்கிறது. இது பலருக்கும் உதவியான ஒன்றாக மாறியுள்ளது.

"புக் நவ் பே லெட்டர்" என்ற ஆப்ஷனை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். உங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கில் உள்நுழையவும்.
ஸ்டெப் 2: புக் நவ் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: தற்போது ஒரு புதிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் பயணயின் விவரங்கள் மற்றும் தேவையான இதர தகவல்களை நிரப்பி சப்மிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: அடுத்ததாக நீங்கள் கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
ஸ்டெப் 5: அதுவே நீங்கள் டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டு பின்னர் டிக்கெட் கட்டணத்தை செலுத்த விரும்பினால்.. முதலில் www.epaylater.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு பே லெட்டர் என்ற ஆப்ஷன் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதை தேர்ந்தெடுத்து முன்கூட்டியே பணம் செலுத்தாமல் டிக்கெட்டை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்த 14 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறு செலுத்த தவறினால் 3.5% சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும் சரியான நேரத்தில் பணம் செலுத்தி விட்டால் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியிருக்காது.


Click it and Unblock the Notifications