இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக விளங்கும் இந்திய ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்துப் பிரிவு சுமார் 1,462 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில்வே பாதையில் மீது ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாகச் சரக்கு போக்குவரத்துப் பிரிவு மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், இதன் மூலம் இந்த ஆண்டு 1,462 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை இழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
சரக்கு போக்குவரத்துப் பாதிப்பு
விவசாயச் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் விவசாயிகள் ரயில் பாதையின் மீது பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதேபோல் பல்வேறு போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தம் மூலம் சரக்கு போக்குவரத்து மட்டும் அல்லாமல் பயணிகள் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது எனச் சில மாதங்களுக்கு ரயில்வே துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
ரூ.1,462 கோடி நஷ்டம்
இந்நிலையில் இந்த வருடம் நடந்த பல்வேறு போராட்டங்கள் காரணமாக ரயில் சரக்கு போக்குவரத்துக் காரணமாக மத்திய அரசுக்கு சுமார் 1,462 கோடி ரூபாய் அளவிலான வருமானம் இழப்பு ஏற்பட்டு நஷ்டம் அடைந்துள்ளது. இது கடந்த 6 வருடத்தில் ஏற்பட்ட நஷ்ட அளவீட்டை விடவும் மிகவும் அதிகம்.
இதேகாரணத்தால் 2015-16ஆம் நிதியாண்டில் 633 கோடி ரூபாய் நஷ்டமும், 2018-19ஆம் நிதியாண்டில் 912 கோடி ரூபாய் நஷ்டமும் சரக்கு ரயில்வே போக்குவரத்துத் துறை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே விபத்து
மேலும் மார்ச் 23, 2019ல் இருந்து இந்தியாவில் ரயில்வே விபத்து மூலம் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதன் மூலம் 22 மாதம் தொடர்ந்து ஒரு பயணி கூட ரயில்வே விபத்தில் மரணம் அடையவில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறைத் தலைவர்
இதேவேளையில் மறுசீரமைப்புச் செய்யப்பட்ட ரயில்வே நிர்வாகக் குழுவில் பாதுகாப்புக்காக புதிய நிர்வாகத் தலைவரை முதல் முறையாக இந்திய ரயில்வே துறை நியமித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் இந்திய ரயில்வே துறையிலும், ரயில்வே பயணத்திலும் பாதுகாப்புப் படிப்படியாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
592 ஊழியர்கள் உயிரிழப்பு
மேலும் கொரோனா பாதிப்புக் காரணமாக இந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த சுமார் 592 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மார்ச் 2020 முதல் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் யாருக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை, சம்பளமும் தமாதமாக அளிக்கப்படவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications