இந்திய ரயில்வே வசதியான ஒரு போக்குவரத்து முறை. அதோடு டிக்கெட் கட்டணமும் குறைவாக இருப்பதால் மக்கள் பலரும் ரயில் மூலம் பயணம் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர். சிலர் முக்கிய பயணங்களை மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அப்படி டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிக்க விரும்புபவர்கள் ஒரு சில விதியைப் பின்பற்ற வேண்டும். அது குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களுடன் பயணம் செய்கையில் அடையாளச் சான்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் பயணத்தின் போது உங்களுடைய ஒரிஜினல் அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். உங்களிடம் ஒரிஜினல் சான்றுகள் இல்லாமல் இருந்தால் டிக்கெட் இல்லாத பயணியாக உங்களை டிக்கெட் செக்கர் கருதுவார்.

அதோடு அபராதமும் இதற்கு விதிக்கப்படலாம். ரயிலிலிருந்து உங்களை இறக்கி விடவும் டிக்கெட் செக்கருக்கு உரிமை உண்டு. எனவே முன்பதிவு செய்த டிக்கெட்டோடு பயணம் செய்கையில் எந்தெந்த அடையாளச் சான்றுகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அடையாளச் சான்றுகள்: நீங்கள் முன் பதிவு செய்த இ-டிக்கட்களோடு பயணிக்கையில் பின்வரும் அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.
ஆதார் கார்டு
பாஸ்போர்ட்
வோட்டர் ஐடி
ஓட்டுனர் உரிமம்
பான் கார்டு
புகைப்படத்துடன் கூடிய வேறு அரசாங்க ஆவணங்கள்
அடையாளச் சான்று எடுத்துச் செல்லாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள்:
டிக்கெட் இல்லாத பயணியாகக் கருதப்படுவார்: உங்களிடம் ஒரிஜினல் அடையாளச் சான்று இல்லை என்றால் டிக்கெட் செக்கர் உங்களை டிக்கெட்டில்லாத பயணியாக கருதலாம். அதோடு டிக்கெட் செக்கர் இதற்கு அபராதம் வசூலிப்பார். மேலும் உங்களின் உறுதிப்படுத்தப்பட்ட சீட்டை ரத்து செய்யவும் டிக்கெட் செக்கருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அபராதம்: ஏசி கோச்சாக இருந்தால் டிக்கெட் விலையுடன் சேர்த்து ரூ. 440 அபராதம் விதிக்கப்படலாம். ஸ்லீப்பர் கோச்சாக இருந்தால் டிக்கெட் விலையுடன் சேர்த்து 220 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இட ஒதுக்கீடு கிடையாது: நீங்கள் ஒரிஜினல் ஐடியை எடுத்துச் செல்லவில்லை என்றால் உங்கள் சீட் ரத்து செய்யப்பட்டு. அபராதம் மற்றும் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் அதன் பிறகும் உங்கள் சீட்டுக்கு எந்தவித உத்தரவாதமும் இருக்காது.
எனவே உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்களுடன் பயணம் செய்த ரயில்வே விதிகளை பின்பற்றி ஒரிஜினல் ஐடியை எடுத்துச் செல்லுங்கள். தடையின்றி பயணம் செய்ய அவ்வப்போது ரயில்வே வெளியிடும் தகவல்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications