புறநகர் ரயில் சேவைகளில் தொடங்கி நீண்ட தொலைவிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் வரை நமக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்குகிறது இந்திய ரயில்வே. இதனால் தான் உள்ளூரிலேயே வேலைக்கு மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும் வெளியூர்களுக்கு செல்பவர்களும் என நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
இந்திய ரயில்வே பொருத்தவரை நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் டிக்கெட் முன்பதிவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இப்போது நாம் ரயில்வே டிக்கெட் வேண்டும் என்றால் நாம் ரயில் நிலையத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே மொபைல் போனில் ஒரு செயலி வாயிலாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட முடியும்.

அந்த வகையில் வரும் மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து ரயில்வே டிக்கெட் பெறுவதில் மிகப்பெரிய மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது. அடிக்கடி வெளியூர் செல்பவர்களும், புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களும் இந்த மாற்றத்தை தெரிந்து வைத்துக் கொள்வது கட்டாயம். இல்லை என்றால் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடலாம். அன்ரிசர்வ்டு டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் , சீசன் பாஸ்களை பெற Unreserved ticketing system அதாவது யுடிஎஸ் ( UTS ) செயலியை பயன்படுத்தி வருகிறோம்.
வரும் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து இந்த யுடிஎஸ் செயலி இயங்காது என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. அதாவது வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியா முழுவதுமே யுடிஎஸ் செயலியின் சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. அப்படி என்றால் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் பாஸ்கள், சீசன் டிக்கெட்டுகளை எங்கே சென்று வாங்குவது என்ற சந்தேகம் ஏற்படலாம்.

இதற்கு இந்திய ரயில்வே அண்மையில் அறிமுகம் செய்த ரயில் ஒன் செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ரயில்வே கடந்த ஆண்டு ரயில் ஒன் செயலியை அறிமுகம் செய்தது. ரயில்வே சம்பந்தப்பட்ட சேவைகளையும் ஒருங்கிணைத்த ஒரு பிரத்தியேக செயலியாக இது இருக்கிறது.. ரயில் ஒன் செயலியில் நாம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் ,நம்முடைய புகார்களை பதிவு செய்து அதற்கான நிவாரணத்தை பெறலாம்.
இதற்கு முன்பு ரயில்வே சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலியை நாம் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் ரயில் ஒன் செயலி இவை அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு செயலியாக இருக்கிறது. எனவே உங்கள் மொபைல் போனில் ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து செயலிகளையும் அன் இன்ஸ்டால் செய்துவிட்டு இந்த ரயில் ஒன் செயலியை இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும் என ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.
அதிகபட்சமான பயணிகளிடம் இதனை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக யுடிஎஸ் செயலியின் பயன்பாட்டை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. யுடிஎஸ் செயலியை பயன்படுத்தக்கூடிய பயணிகள் அதே லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொண்டு ரயில் ஒன் செயலியில் லாகின் செய்து பயன்படுத்தலாம் என தெரிவித்திருக்கிறது. மார்ச் 1 வரை காத்திருக்காமல் இப்போது ரயில் ஒன் செயலியில் அன்ரிசர்வ்டு, பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பழகி கொண்டால் சிரமங்களை தவிர்க்கலாம் என கூறுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications