RAC டிக்கெட் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா இந்திய ரயில்வே? பயணிகளே கவனம்..!!

குறைந்த கட்டணத்தில் நிம்மதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் தான் இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இதனாலேயே ரயில் டிக்கெட்டுகள் அத்தனை எளிதாக கிடைப்பது இல்லை. அதுவும் பண்டிகை காலம் என்றால் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே முழுவதும் புக் செய்யப்பட்டு விடும்.

ரயில் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்க கூடிய ஒரு டிக்கெட் முறை RAC - Reservation against cancellation. இத்தகைய RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், முழு கட்டணத்தை செலுத்தினாலும் கூட, படுக்கை வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதியளவை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது ஒரு படுக்கை வசதி கொண்ட இருக்கையில் இரண்டு பயணிகள் பகிர்ந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

RAC டிக்கெட் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா இந்திய ரயில்வே? பயணிகளே கவனம்..!!

முழு டிக்கெட் கட்டணம் செலுத்திவிட்டு, இரவு நேரங்களில் முறையான படுக்கை வசதி இல்லாமல் பலரும் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முன்பதிவு செய்யும் போது ஒரே RAC இருக்கை சில சமயம் ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு மாறி மாறி ஒதுக்கப்படும் போது கடுமையான சங்கடங்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் முன்னொரு காலத்தில் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்யும் Manual booking நடைமுறையில் இருந்த காலத்தில், கூடுதல் பயணிகளை ரயிலில் இணைப்பதற்காக RAC முறை உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழலிலும் பல்வேறு போக்குவரத்து வசதிகள் வந்துவிட்ட நிலையிலும் RAC முறையை நடைமுறையில் வைத்திருப்பது பொருத்தமற்றது என சிலர் கூறுகின்றனர்.

Also Read

முன்னதாக நாடாளுமன்ற நிலை குழுவும் முழு பயண கட்டணத்தை வசூலித்து கொண்டு, பயணிகளுக்கு தனி படுக்கை வசதியை வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது. அப்படி ஒரு இருக்கையை இருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என கூறி இருந்தது.

Recommended For You

இந்நிலையில் தான் RAC முறையை முற்றிலுமாக நீக்கலாம் அல்லது வேறு விதங்களில் மாற்றி அமைக்கலாம் என பயணிகள் கூறுகின்றனர். ரயில்வே துறையை பொறுத்தவரை RAC முறையை முழுமையாக நீக்கினால், வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகள் ரயிலில் பயணம் செய்வதை நிர்வகிப்பதில் புதிய நடைமுறைகளை கொண்டுவர வேண்டியிருக்கும். இது டிக்கெட் கிடைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பயணிகள் வசதி மற்றும் பயண வாய்ப்புகளுக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டு வருகிறது என மிர்ரர் நௌவ் செய்தி கூறுகிறது.

RAC டிக்கெட் முறையை நீக்கினால் அதற்கு மாற்று என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் பரிசீலனை கட்டத்திலேயே உள்ளது, இது குறித்த இறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+