பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன தெரியுமா? வசதியான இருக்கை மற்றும் மலிவான டிக்கெட் கட்டணம் என்பதால் தான். இந்திய ரயில்வே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுடைய பெண்கள் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக லோவர் பர்த் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கி வருகிறது.
யாருக்கெல்லாம் லோவர் பர்த் கிடைக்கும்?: நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் முதியவர்களுக்கு அப்பர் பர்த் மற்றும் மிடில் பர்த் போன்றவற்றில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே இவர்களுக்கு லோவர் பர்த் கோட்டாவை வழங்குகிறது.

ஆண்களாக இருந்தால் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்களாக இருந்தால் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. எல்லா நேரங்களிலும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ரயில் பெட்டிகளில் உள்ள காலியிடங்கள், நீங்கள் முன்பதிவு செய்யும் நேரம் மற்றும் கிளாஸ் ஆகியவற்றை பொருத்தும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு கிளாஸுக்கும் எத்தனை சீட் ஒதுக்கப்படுகிறது?: ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 லோவர் பர்த் முதியவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. 2AC கிளாஸில் 3 முதல் 4 லோவர் பர்த்தும், 3AC கிளாஸில் 4 முதல் 5 லோவர் பர்த்தும் ஒதுக்கப்படுகிறது.
முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் யாருக்காக முன்பதிவு செய்தாலும் சரி.. அவர்களுடைய வயது விவரங்களை சரியாக வழங்க வேண்டும். சீட்டை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே தவறான விவரங்களை வழங்கினால் பிரச்சனை ஏற்படலாம். ரயிலில் எத்தனை பெட்டிகள் இருக்கிறது என்பதைப் பொறுத்து முதியவர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த கோட்டாவில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
லோவர் பர்த் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?: நீங்கள் முன்பதிவு செய்தும் உங்களுக்கு அப்பர் பர்த் அல்லது மிடில் பர்த் கிடைத்திருந்தால் நீங்கள் டிக்கெட் செக்கரிடம் பேசிப் பார்க்கலாம்.
பயணத்தின் போது காலியாக இருக்கும் லோவர் பர்த்தை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒதுக்க விதிமுறை இருக்கிறது. எனவே டிக்கெட் செக்கரை அணுகி உங்கள் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறலாம். ஆனால் ரயிலில் காலியிடம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.


Click it and Unblock the Notifications
