சென்னை: நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் பயணம் செய்வதற்கு ரயில்களையே பயன்படுத்துகின்றனர். சௌகரியமான பயணம் மற்றும் மலிவான டிக்கெட் ஆகிய இரண்டுமே சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில்களை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
டிக்கெட் உயர்வு: இந்நிலையில் இந்திய ரயில்வே நீண்ட தூர பயணங்களுக்கான ரயில் டிக்கெட் விலையை உயர்த்தி ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. இதன்படி குறைந்த தூரம் பயணம் செய்பவர்களுக்கும், புறநகர் ரயில்வே பயணம் செய்பவர்களுக்கும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஏசி வகுப்புகள் மற்றும் நீண்ட தூரங்களில் ரயில் பயணம் செய்பவர்கள் இனி கூடுதலாக டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் வகுப்புகளில் டிக்கெட் கட்டணம்: 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ஏசி வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே 500 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்யும் பயணிகள் இது பற்றி கவலைப்பட தேவையில்லை. அதே வேளையில் 500 கிலோ மீட்டருக்கு மேல் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அரை பைசா என டிக்கெட் உயர்த்தப்படுகிறது. அதாவது 1000 கிலோமீட்டர் பயணம் செய்யக்கூடிய ஒரு பயணி இது நாள் வரை செலுத்திய கட்டணத்திலிருந்து இனி 2.50 ரூபாயை கூடுதலாக செலுத்த வேண்டும்.
ஏசி அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்கள் 500 கிலோமீட்டருக்குள் சென்றால் கட்டண மாற்றம் இல்லை. ஆனால் 500 கிலோமீட்டருக்கு மேல் சென்றால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு பைசா கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது 1000 கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் இதற்கு முன்பு செலுத்திய கட்டணத்தை விட இனி 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
ஏசி வகுப்புகளுக்கு கூடுதல் டிக்கெட்: ஏசி பெட்டிகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் 500 கிலோமீட்டருக்குள் பயணம் செய்தால் பழைய டிக்கெட் விலை தான். ஆனால் 500 கிலோமீட்டருக்கு மேல் சென்றா ஒவ்வொரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும். இவர்கள் 1000 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பயணத்திற்கு இது நாள் வரை செலுத்திய தொகையிலிருந்து இனி கூடுதலாக 20 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
புறநகர் ரயில் டிக்கெட்டில் மாற்றமில்லை: புறநகர் ரயில் டிக்கெட் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அதேபோல மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை .


Click it and Unblock the Notifications