பெரும்பாலான மக்களுக்கும் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்துவதில் இந்திய ரயில்வே பெரும் பங்கு வகிக்கிறது. இந்திய ரயில்வே மூலம் நாள் ஒன்றுக்கு மில்லியன் கணக்கானோர் பயணம் செய்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு ஒரு சில நேரங்களில் டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நீங்கள் ரத்து செய்யும் நேரத்தை பொறுத்துதான் ரயில்வேயால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பலருக்கும் குழப்பமானதாக இருக்கலாம் இந்தப் பதிவில் அது குறித்த தகவல்களை முழுமையாக பார்ப்போம்.
இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்யும் நபர்கள் "கன்ஃபார்ம்", "RAC" அல்லது "வெயிட்டிங் லிஸ்ட்" டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும்போது, கேன்சலேஷன் சார்ஜ் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் டிக்கெட் கேன்சல் செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும். மேலும், இந்த கட்டணங்கள் டிக்கெட்டின் வகையைப் பொறுத்தும் மாறுபடும்.

அதாவது ஏசி கிளாஸ் முதல் செகண்ட் கிளாஸ் வரை நீங்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டை பொறுத்து இந்த கட்டணங்கள் மாறுபடும்.
கன்ஃபார்ம்டு டிக்கெட்டுகளை முன்கூட்டியே ரத்து செய்தல்: ட்ரெயின் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு மேலாக நேரம் இருந்து, நீங்கள் உங்கள் ட்ரெயின் டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால் பின்வரும் கட்டணங்கள் பொருந்தும்.
ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்/எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்: ரூ.240
ஏசி 2 டயர்/ஃபர்ஸ்ட் கிளாஸ்: ரூ.200
ஏசி 3 டயர் /ஏசி சேர் கார், ஏசி-3 எக்கானமி கிளாஸ்: ரூ.180
செகண்ட் கிளாஸ்: ரூ.60
48 மணி நேரத்திற்கும் குறைவாக, ஆனால் ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை கேன்சல் செய்தால் மொத்த கட்டணத்தில் 25 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கும் குறைவாக.. அதாவது சுமார் 4 மணி நேரத்தில் ரயில் புறப்பட இருக்கும் பட்சத்தில், நீங்கள் கன்ஃபார்மான டிக்கெட்டை ரத்து செய்தால் மொத்தக் கட்டணத்தில் 50 சதவீத கட்டணத்தை ரயில்வே வசூலிக்கும்.
RAC அல்லது காத்திருப்புப் பட்டியலில் உள்ள ரயில் டிக்கெட்டைப் பெற்றிருந்தால், அதை ரத்து செய்யவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது. ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதைச் செய்யலாம்.
சிலருக்கு கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது கிடைக்கும் ரீபண்ட் தொகை எதை வைத்து கணக்கிடுகிறது? என்பது தெரியாமல் இருந்திருக்கும். இந்தப் பதிவின் மூலம் ரீபண்ட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது தெரிந்திருக்கும். எனவே, ரயில் பயணத்தைத் திட்டமிடும்போது, இந்த கட்டண விவரங்களை கவனத்தில் கொள்வது முக்கியம். முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையற்ற ரத்துக்களைத் தவிர்க்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications