காஷ்மீர்: முதல் முறையாக இந்திய ரயில்வே ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே ரயில் சேவையை தொடங்க இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் இடையே ஜனவரி மாத இறுதிக்குள்ளேயே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஜம்முவின் காத்ரா பகுதியில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை இயக்கப்பட இருக்கின்றன. தற்போதைக்கு இங்கே இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் இந்த ரயில்கள் மூன்று மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் ஜம்முவில் இருந்து காஷ்மீரை சென்று அடையும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தால் வரலாற்றிலேயே முதன்முறையாக ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே இயக்கப்படும் முதல் ரயில் சேவை என்ற பெருமை இதற்கு கிடைக்கும்.
தற்போது ஜம்மு ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், அந்த பணிகள் நிறைவடைந்த உடன் நேரடியாக ஜம்மு நிலையத்திலிருந்து ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அது தவிர இந்திய ரயில்வே சார்பாக உத்தம்பூர் - ஸ்ரீநகர்- பாரமுல்லா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் பாதை பணிகளுக்காக அரசு சுமார் 40,000 கோடி ரூபாயை செலவிடுகிறது.
இந்த ரயில் பாதை பணிகள் நிறைவடையும் பட்சத்தில் காஷ்மீரில் இருந்து டெல்லி வரை நேரடியாக ரயில் சேவை தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் குளிர் அதிகமாக இருக்கும் ஒரு பகுதி என்பதால் அதற்கு ஏற்ற வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பனியிலும் திறம்பட செயல்படக் கூடிய வகையில் இந்த ரயில் பெட்டிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக ரயில் பாதைகளில் இருக்கும் பணியை அகற்றும் அமைப்புகள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதாவது அனைத்து கால சூழல்களிலும் செயல்படக் கூடிய வகையில் இந்த ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
இது தவிர ரயில் பெட்டிகளில் அதிநவீன சூடாக்கும் அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்னதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தம்பூர் - ஸ்ரீ நகர் - பாரமுல்லா ரயில் பாதையில் காத்ரா முதல் பானிஹல் வரையிலான பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டார் என தெரிவித்திருந்தார்.
இந்த 111 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதை உலகிலேயே மிகவும் சவாலான ரயில் பாதை என சொல்லப்படுகிறது. இதில் 97 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதை சுரங்கத்திலும், 7 கிலோமீட்டர் ரயில் பாதை பாலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் தான் உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் அமைந்திருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications