குளிர்காலம் தொடங்கிவிட்டால் அதிக அளவிலான மூடுபனியின் காரணமாக ரயில் தாமதங்கள் அடிக்கடி ஏற்படும். இதனால் ரயில் பயணிகள் சிரமப்படாமல் இருக்க வேண்டி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில் சேவைகளுக்கு சில சிறப்பு ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இது போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகள் சிரமப்படாமல் இருப்பதற்காக அவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்படவுள்ளது.
ஐஆர்சிடிசி-யின் கேட்டரிங் பாலிசியின் படி, பிரீமியம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் வருகை நேரத்தை விட இரண்டு அல்லது அதற்கு மேலான மணி நேரம் தாமதமாக வந்தால் அவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். ரயில் தாமதத்தை பொறுத்து காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவும் வழங்கப்படவுள்ளது.

முதலில் ரயில் பயணத்தை தொடங்குவதற்கு டீ அல்லது காபி கொடுக்கப்படுகிறது. காலை உணவு, மாலை நேரத்திற்கான டி போன்றவையும் ரயில் தாமதமாகும் நேரத்தை பொறுத்து வழங்கப்படுகிறது. அதேபோல காலை நேர உணவிற்கு 4 பிரெட் துண்டுகள், பட்டர், 200ml ஜூஸ், அதோடு ஒரு கப் டீ அல்லது காபி போன்றவை வழங்கப்படுகிறது.
மதிய உணவு: IRCTC பல்வேறு மதிய மற்றும் இரவு உணவு விருப்பங்களையும் வழங்குகிறது. ராஜ்மா, தால் போன்ற பிரபலமான உணவு வகைகளும் வழங்கப்படுகிறது. உணவின் சுவையை அதிகரிக்க நீண்ட காலமாக இந்தியாவில் வழங்கப்படும் ஒரு சைடிஷ் ஊறுகாய். அதுவும் இந்த மெனுவில் அடங்கும். இதற்கு மாற்றாக பூரி, மிக்ஸட் வெஜிடபிள்ஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது.
தாமதங்களுக்கான ரீபண்ட்: அதிகநேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இந்திய ரயில்வே வாடிக்கையாளர்களுக்கு ரீபண்டுகளையும் வழங்குகிறது. 3 மணி நேரத்திற்கு மேலாக ரயில் தாமதமாகும் பட்சத்தில் அல்லது திருப்பி விடப்படும் பட்சத்தில், பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் முழு பணமும் திரும்ப கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் தங்கள் பணத்தை டிக்கெட் முன்பதிவு செய்த சேனல் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் வசதிகள்: உணவு மற்றும் டிக்கெட் ரீபண்ட் போன்றவற்றுக்கு அப்பால் இந்திய ரயில்வே தாமதத்தின் போது பயணிகள் சிரமப்படாமல் இருக்க கூடுதல் வசதியையும் வழங்குகிறது. உணவு மற்றும் ரயில் பயணிகள் காத்திருப்பதற்கு வசதியாக காத்திருப்பு அறைகள் கட்டணமின்றி பயணிகளுக்கு கிடைக்கின்றன. அதேபோல ரயில் நிலையங்களில் உள்ள உணவு கடைகள் நீண்ட நேரம் தாமதமானாலும் பயணிகளுக்கு வசதியாக இருப்பதற்காக திறந்திருக்கும். குறிப்பாக இரவு நேர பயணங்களின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரயில்வே பாதுகாப்பு படையில் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications